மோடியை மகனாகப் பெற்றதற்கு அந்த அம்மையார் என்னவெல்லாம் சிரமம் இன்னும்
அனுபவிக்க வேண்டியிருக்குமோ என்று நவம்பர் மாதத்தில் எழுதிய பதிவு இங்கே இணைப்பில் உள்ளது. என் அச்சம் நிஜமாகி விட்டது.
நேற்றிலிருந்து வாட்ஸப்பில் உலா வருகிற செய்தி
ஒன்றுண்டு.
மோடியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் அவரே 108 எண்ணுக்கு தொலைபேசி செய்து ஆம்புலன்ஸை வரவைத்தார். மருத்துவமனையிலும் கூட
ஸ்பெஷல் வார்டில் அனுமதிக்கப்படுவதை மறுத்து பொது வார்டில் சேர்ந்து கொண்டார்.
தாயைப்பார்க்கப் போனதைக் கூட செய்தியாக்கியவர் மோடி. அப்போது கூட அவர்
கண்கள் காமெராவைத்தான் நோக்கியிருந்தது.
தள்ளாத வயதில் வங்கி வரிசையில் நிற்க வைத்து அவதிப்படுத்தினார்.
இப்போதும் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் கூட ஒரு விளம்பரச்
செய்தியாக்குகிறார்.
பத்து லட்சம் ரூபாய் கோட் போட்ட ஒரு சுகபோகி தன் விளம்பர மோகத்திற்காக 95 வயது மூதாட்டியை இப்போது பொது வார்டில் அனுமதிக்க வைத்துள்ளார்.
அவரை வைத்து மோடி இன்னும் என்னவெல்லாம் நாடகம் நடத்தப் போகிறாரோ?
மோடியை மகனாகப் பெற்ற அந்த மூதாட்டியாரின் நிலைமை உண்மையிலேயே மிகவும்
பரிதாபகரமானது.
No comments:
Post a Comment