முதலில் இந்த தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஒரு நகைச்சுவைக் காட்சியை இந்த இணைப்பில் சென்று பாருங்கள்
ஐஸ்வர்யா தனுஷின் ஐ.நா.சபை பரத நாட்டியத்தைப் பார்க்கும் துயரம் எனக்கும் வாய்த்தது. உங்களை கொடுமைப்படுத்தும் கொடூரனாக இருக்க விரும்பாததால் அந்த இணைப்பை இங்கே அளிக்கவில்லை.
அப்படி ஒன்றும் அதிகமான பரதநாட்டிய நிகழ்ச்சிகளை பார்த்தவன் கிடையாது. எப்போதாவது தொலைக்காட்சிகளில் பார்ப்பதுதான். எங்கள் தோழர் ஒருவரது மகளின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு இரண்டு வருடங்கள் முன்பாக சென்றிருந்தேன். முதல் நிகழ்ச்சி என்று சொல்ல முடியாத அளவிற்கு அவ்வளவு சிறப்பாக ஆடினாள் அந்தப் பெண்.
என் மகன் வயலின் கற்றுக்கொள்ளும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகள் மிகவுமே அருமையாக இருக்கும். கடந்த வருடம் கூட அவர்களின் ஆண்டு விழாவில் "பாஞ்சாலி சபதம்" நாட்டிய நாடகம் நடத்தினார்கள். சின்னச் சின்ன கதாபாத்திரம் தொடங்கி பாஞ்சாலி, துரியோதனன் என முக்கிய கதாபாத்திரங்கள் வரை (மேலே சொல்லியிருந்த பெண்தான் துரியோதனன் கதாபாத்திரத்தில் நடித்தது) எல்லோருடைய பங்களிப்புமே சூப்பராக இருந்தது.
வேலூர் மாதிரியான சின்ன நகரங்களில் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களுக்கான நிகழ்ச்சிகளிலேயே கவனம் எடுத்துக்கொள்கிறபோது ஐ.நா.சபை மாதிரியான இடத்தில் கிடைத்த வாய்ப்பை இப்படி காமெடியாக மாற்றி விட்டார்.
பாக்யராஜ் திரைப்படத்தில் நடனமாடுவதை கிண்டலடிப்பார்கள். இவர் நடனத்தைப் பார்க்கையில் பாக்யராஜ் எவ்வளவோ மேல்.
அகில உலக எழுத்தாள மேதாவி ஆசான் ஜெமோ சில நாட்கள் முன்பாக நாட்டியப் பேர்வழி என்று பத்மினியை தனக்கே உரிய வக்கிரத்தோடு கிண்டலடித்து எழுதியிருந்தார்.
இந்த நடனத்தினைப் பற்றி அவர் எதுவும் வாய் திறக்க மாட்டார். ரஜனி பெண்ணைப் பற்றி எழுதி சினிமா பிழைப்பை கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு முட்டாளா என்ன அவர்? இல்லை அவ்வளவு கொள்கைக் குன்றா?
ஆனால் ஒன்று பத்மினி மட்டும் அந்த கொடூர நடனத்தைப் பார்த்திருந்தால் ஆரம்பத்தில் அந்த காணொளியில் சிக்கல் சண்முகசுதரம் போல
"போதும்மா, எனக்கு நடனமே மறந்து போயிடும்"
என்று கதறியிருப்பார்.
உண்மையான நடனக் கலைஞர்கள் எத்தனை பேர் இப்போது கதறினார்களோ?
ஜெயமோகனை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கமே வராதா? அவர் உங்களைப் போன்றவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார். அவர் எழுத்தின் முன்னால் வெறும் தூசியைப் போன்றவர்கள்தான் அவரை விமர்சிக்கிறார்கள். அவரை திட்டினால் அதன் மூலம் பிரபல்யம் அடையலாம் என்று மனப்பால் குடிக்காதீர்கள்
ReplyDeletehaha haha
ReplyDeletejeyamohan feels that he is not good writer thats why he makes noise to keep in media attention.. Writers feels good about them self dont make noise. if you feel inferior inside you will act superior and create a group to bark for you
ReplyDelete