கீழே உள்ள பதிவு ஒரு மாதத்திற்கு முன்பு எழுதி டிராப்டிலேயே இருந்தது. தோழர் தொல்.திருமாவளவனை எச்.ராஜா, தேசத்துரோகி என்று சொன்னதை கேள்விப்பட்டதும் இப்பதிவு நினைவுக்கு வந்தது. அநாகரீகமான தாக்குதல்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட எச்.ராஜா போன்ற ஆணவமான, அசிங்கமான மனிதனுக்கு இப்படிப் பட்ட வரவேற்பு தவறில்லை.
திமிர் பிடித்த அந்த வாயையை அடைக்காவிட்டால் அந்த வாயிலேயே நாலு போடு போடலாம். தவறில்லை.
சுனா சாமிக்கு அந்த மரியாதைதான் சரி
1992 ம் வருடம் நெய்வேலியிலிருந்து குடியாத்தத்திற்கு பதவி உயர்வு மூலம்
வந்தேன். அலுவலகம் குடியாத்தமாக இருந்தாலும் வேலூரிலிருந்து தினம் சென்று வருவேன்.
Cash பிரிவில் அப்போது இருந்ததால் Safe ன் ஒரு சாவி என்னிடம் இருக்கும். காலை 9.45 மணிக்குள் சென்றால்தான் பணப்பெட்டியை வெளியில் எடுத்து பத்து மணிக்கு
காசாளர் தன் பணியை துவக்க சரியாக இருக்கும்.
பெரும்பாலும் 8.30
மணி அல்லது 8.35 மணிக்கு புறப்படும் பேருந்தை பிடித்து விடுவேன். எட்டு மணிக்கு
வீட்டிலிருந்து புறப்பட்டு டி.வி.எஸ் பிப்டியில் வந்து பேருந்து நிலையத்துக்கு
பின்னே இருக்கும் ஒரே ஒரு பார்க்கிங் பாயிண்டில் (அப்போது ஒரு நாள் கட்டணம் ஒரு
ரூபாய். மாதக்கட்டணம் இருபத்தி ஐந்து ரூபாய். அக்காலகட்டத்தில் அதுவே
சிரமமாகத்தான் இருக்கும்) வண்டியை விட்டு வந்தால் சரியாக இருக்கும்.
இந்த காலக்கட்டத்தில் அன்றொரு நாள் பேருந்து நிலையத்திற்கு செல்கையில் லாங்
பஜாருக்கு முன்பாக போக்குவரத்தை போலீசார் நிறுத்தி விட்டார்கள். வேறு வழியிலும்
திரும்பிச் செல்ல முடியாமல் தடைகளை போட்டு விட்டார்கள். பையிலிருந்த safe key ஐ காண்பித்து பத்து மணிக்கு முன்பாக குடியாத்தம் செல்ல வேண்டும் என்று
கேட்டதால் பெரிய மனது செய்து ஒரு சப் இன்ஸ்பெக்டர் அனுமதித்தார்.
காந்தி சிலையை கடக்கையில் கவனித்தேன். அங்கே பெரிய கூட்டம். அப்போதைய
அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ வும் அதிமுக மாவட்டச் செயலாளருமான பெரிய மீசை
பாண்டுரங்கன் (அதாங்க ஜெ வைப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்வாரே அவர்தான்) ஏதோ
கட்டளைகள் கொடுத்துக் கொண்டு இருந்தார். வேலூர் கோட்டை நுழைவாயிலுக்கு முன்பு
பெண்கள் கூட்டம் திரண்டிருந்தது.
அலுவலகம் செல்லும் அவசரத்தில் இருந்தாலும் கூட ஆர்வம் தாங்காமல் ஒருவரிடம்
என்ன விஷயம் என்று கேட்டேன். ஒரு முக்கியமான பிரமுகர் வரப் போகிறார். அவருக்கு
வரவேற்பு கொடுக்கத்தான் என்று சொன்னார். சரி, சசிகலா குடும்பத்து ஆட்கள் யாராவது
ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு வருகிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டேன்.
சில வங்கி ஊழியர்களும் நான் செல்லும் பேருந்தில் வருவார்கள். அன்று
யாரையும் காணவில்லை. போக்குவரத்தை திருப்பி விட்டதால் பேருந்தை பிடிக்க முடியாமல் அன்று விடுப்பு போட்டு விட்டதாக மறுநாள் சொன்னார்கள். அலுவலகம் முடிந்து வேலூர் திரும்புகையில் பெட்டிக்கடையில்
தொங்கிய மாலை முரசு “வேலூரில் சுப்ரமணியசாமிக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்”
என்று தலைப்புச் செய்தியில் சொன்னது.
ஆம் அன்றுதான் வேலூர் கோட்டைக்குள் இயங்கிய நீதிமன்றத்திற்கு வந்த சுனா
சாமிக்கு முட்டையும் தக்காளியும் எறிந்து அதிமுக மகளிர் அணியின் ஆபாச நடனத்தோடும்
வரவேற்பு கொடுத்தார்கள்.
அநாகரீகமான செயல் அது என்றுதான் அன்றைக்கு நினைத்தேன். ஆனால் தமிழர்களை
தொடர்ந்து பொறுக்கி என்று சொல்லிக் கொண்டிருக்கிற, சாக்கடைக்குள் ஒளிந்து
கொள்பவர்கள் என்று இழிவுபடுத்துக் கொண்டிருக்கிற சுனாசாமிக்கு அந்த அதிமுக
மரியாதைதான் சரி என்று இன்று தோன்றுகிறது.
சுனாசாமி யின் ஆபாச மொழி மட்டும் சில சங்கிகளின் கவனத்திற்கு ஏன்
வருவதில்லை என்று தெரியவில்லை.
சுனாசாமி யின் ஆபாச மொழி மட்டும் "சில சங்கிகளின் கவனத்திற்கு" ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை
ReplyDeleteidho
ippo
romba naal
kalichu
unga(lukku/moolam)
varudhey?
அறிவு கெட்டவனே, என்ன சொல்ற நீ?
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteதம்பி, உன் பேரு என்ன ஜெயமோகனா? அந்தாளு மாதிரியே அபத்தமா பழி போடறியே. நான் எப்போ வலைப்பக்கத்திற்கு எழுதுவேன் என்று முன்னரே சொல்லியுள்ளேன். தேடிப் படிச்சுட்டு அப்புறம் வா
Deleteதொல்.திருமாவளவனை பற்றிய தகவல்கள் இன்றைய செய்திகள்,மற்றும் நண்பர்கள் தெரிவித்த தகவல்களும் அறிந்தேன்.
ReplyDeleteரஜினிகாந்த் இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்குபற்ற இருந்தாராம், கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும் நீங்க எல்லாம் அங்கே இலங்கை செல்ல கூடாது என்று திருமாவளவன் கேட்டு கொண்டாராம். ரஜினிகாந்த்தும் அவருக்கு பயத்தினால் இலங்கை போக மாட்டேன் என்று சொல்லிட்டாராம்.
இலங்கையிலும் ரஜினிகாந்த், விஜய், அஜீத் படங்கள் ஓடுகின்றன.அவர்களுக்கு கட்டவுட் வைத்து பால் ஊத்துகிறார்கள்.
தொல்.திருமாவளவன் தடுத்து ரஜினிகாந்த் இலங்கை செல்லாமையால் யாருக்கு பாதிப்பு?
ரஜினிகாந்த்தை பார்த்து மகிழ்ச்சியடையவிருந்த அவரது இலங்கை தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே.
கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று தமிழர்களை நோக்கி செல்லும் தமிழ் இந்திய நடிகர்களை,நடிகைகளை ஏன் தொல்.திருமாவளவன் தடுப்பதில்லை?
இலங்கையில் வாழ்பவர்கள் மட்டும் தங்களது அபிமான நடிகரை பார்த்து மகிழ்ச்சி அடைய கூடாது என்று தடைபோடும் தொல்.திருமாவளவன் நிலைபாடு எதஙற்காக?
அட நீங்க வேற நண்பரே, ஒவ்வொரு புது படம் ரிலீஸாகும் போதும் ஒரு சர்ச்சையை உருவாக்குவது ரஜனிக்கு வாடிக்கை. நாம அவருக்கு விளம்பரம் செய்யனுமா என்றுதான் இப்பிரச்சினை குறித்து நான் எதுவும் எழுதவில்லை. ஆர்.கே.நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்று சொன்னதிலிருந்து கவனத்தை திசை திருப்ப வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்கு
Deleteநாம அவருக்கு விளம்பரம் செய்யனுமா என்றுதான் இப்பிரச்சினை குறித்து நான் எதுவும் எழுதவில்லை
Deletepl.vilambaram
seinga
illenaaa
Rajini
Yarney
theriyama poi
padam flap
Aayittaaa!
pl. vilambaram
seinga...
இம் மாதம் 10-ந் தேதி இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கபட்ட தமிழர்கள் 150 பேருக்கு இலவச வீடுகள் வழங்கபட்டதாக தகவல் அறிந்தேன்.தொல்.திருமாவளவனால் இலங்கையில் உள்ள தமிழ் ரஜினிகாந்த் ரசிகர்களை தான் கவலைபட வைக்க முடிந்தது.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete