Sunday, March 26, 2017

ஜெமோ, யாரந்த கீழ்மகன்?

அதிகபட்ச கோபத்தோடுதான் ஒரே மனிதனைப் பற்றி உடனடியாக இன்னொரு பதிவு. 

கீழ்மகன் என்று அவர் பயன்படுத்தும் சொற்றொடருக்கு அவர்தான் மிகவும் பொருத்தம் என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

 




எனது முந்தைய பதிவில் சொல்லப்பட்டதை விட கொடூரமான விஷயங்கள் இதைக் கேட்கையில் தெரிய வருகிறது.

சாவி அலுவலகத்தில் அசோகமித்திரன் டீ வாங்கித் தரும் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார்  என்று இதிலே சொல்கிறார். 

அசோகமித்திரன் மட்டுமல்லாமல் சாவியையும் சேர்த்து இழிவுபடுத்துகிறார் ஜெயமோகன் என்று மாலன் கண்டனம் தெரிவித்திருந்ததை கீழே தந்துள்ளேன்.

 
திரு.ஜெயமோகன், SBS வானொலிக்கு அளித்த பேட்டியின் பாட்காஸ்ட்டை கேட்டேன், திடுக்கிட்டேன்.
சாவி இதழில் அவர் டீ வாங்கி வரும் கடைநிலைப் பணியாளாராக பணி அமர்த்தப்பட்டார் என்று ஒரு குண்டு வீசுகிறார். அனேகமாக சாவி இதழ்
தொடங்கப்பட்ட காலத்திலிருந்து எனக்கு அதனுடன் தொடர்பு உண்டு. அசோகமித்ரன் ஒரு போதும் சாவியில் பணி புரிந்ததில்லை. அதிலும் டீ வாங்கி வரும் பணி!

இது போல புனைவுகளை அவிழ்த்துவிடுவது அசோகமித்ரனை மட்டுமல்ல, சாவி அவர்களையும் இழிவு செய்வதாகும். அவர் எழுத்தாளர்கள் மீது பெரும் மரியாதை கொண்டவர். தி.ஜா, லஷ்மி, சிவசங்கரி, சுஜாதா போன்ற எழுத்தாளர்களோடு அவர் உரையாடுவதை நான் அருகிருந்து நேரில் பார்த்தவன். ஜெயகாந்தனை அவர் எப்போதும் உயர்வாகப் பேசுவார்.

அசோகமித்ரன், க.நா.சு , லாசரா போன்ற இலக்கிய ஆசிரியர்கள் மீது தனி மரியாதை கொண்டவர். லா.ச.ரா, தி.ஜா ஆகியோரது நாவல்களை மோனாவில் வெளியிட வேண்டும் என்ற யோசனையை ஏற்று செயல்படுத்தியவர். தி,ஜ,ர குடும்பத்திற்கு நிதி திரட்டிக் கொடுத்தவர். கு.ப.ரா மகனுக்கு உதவியவர். 

நல்ல எழுத்தைப் படித்தால், அதை எழுதியது பிரபலமோ, புதியவரோ, அவர் அடையும் மகிழ்ச்சி அலாதியானது. அந்த மகிழ்ச்சியின் பொருட்டுத்தான் அவர் பலரை அறிமுகம் செய்தார்.

அவர் அசோகமித்ரனை டீ வாங்கி வரும் வேலையில் அமர்த்தினார் என்று சொல்ல வன்மமும் வக்ரமான கற்பனையும் வேண்டும்

நான் மட்டுமல்ல, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு ஆகியோருக்கும் கூட சாவியோடு தொடர்பு இருந்தது

மூவருமே அசோகமித்ரன் மீது பெரும் மதிப்புக் கொண்டவர்கள். அதிலும் ராஜுவிற்கு அவர் மீது தேவதா விசுவாசம். அ.மி.யை இப்படி நடத்த நாங்கள் சம்மதித்திருப்போமா ?

ஒரு பெண் எழுத்தாளருக்கு அ.மி. டிரைவராக இருந்தார் என்று இன்னொரு புனைவு. அ.மி. அந்த எழுத்தாளரின் மகனை வைத்துக் காரோட்டிக் கொண்டு போவதை இவர் கண்ணால் வேறு பார்த்தாராம்!. அ.மி.க்கு கார் ஓட்டத் தெரியாது!. 

ஜெயமோகனின் இந்தப் புனைவுகள், அசோகமித்ரனை மட்டுமல்ல, ஆசிரியர் சாவியையும், சக எழுத்தாளர்களையும் அவமதிக்கின்றன. நான் என் ஆட்சேபங்களை SBS வானொலிக்கு எழுதியுள்ளேன்

அ.மி. மீது அன்பு கொண்டவராகவோ, சாவி சார் மீது மதிப்புக் கொண்டவராகவோ இருந்தால் நீங்களும் எழுதுங்கள். மின்னஞ்சல் வேண்டுவோர் என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்க

அதற்குப் பிறகு பார்த்தால் தமிழர்களை இழி மகன்கள்  என்று திட்டத் தொடங்குகிறார்.

அதன் பிறகு சாகித்ய அகாடமி விருது பற்றி சொல்கிற போது "ஒரு பார்ப்பனான அசோக மித்ரனுக்கு சாகித்ய அகாடமி தர முடியாது என்று சொன்ன ஒரு இழி மகனை இவரை சட்டையைப் பிடித்து சுவரோரம் சாத்தி அடிக்கப் போய் விட்டாராம். 

இவ்வளவு பேசுகிற ஜெயமோகனால் யார் அந்த இழி மகன் என்று சொல்ல முடியுமா?

அந்த இழி மகனை அம்பலப்படுத்த வேண்டியதுதானே?

பின் குறிப்பு : அசோகமித்திரனுக்கு முன்பாக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களின் பட்டியலைப் பார்த்தேன். அவருக்கு முன்பாக விருது வாங்கியவர்களில் பதிமூன்று பேர் (நானறிந்தவரை) அசோகமித்திரனின்  ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான்.  ஏன் எந்த இழிமகனும் அவர்களுக்கு விருது கொடுப்பதை தடுக்கவில்லை?

 

 

3 comments:

  1. அசோகமித்திரனின் நிழலைக் கூட நெருங்க முடியாத அற்பம் இந்த ஜெ மோ. அவர் எழுத்தின் ஒரு துளியைக் கூட இவரால் உருவாக்க முடியாது. திமிர் கொண்ட வக்கிரமான பேச்சு.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தம்பி, அந்த மனிதன் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கிடையாது. தேசியவாத காங்கிரஸ். புகார் வந்தவுடன் ராஜினாமா செய்து விட்டார். பாஜக கட்சியாக இருந்தால் முதலமைச்சர் ஆக்கி இருப்பார்கள். பிரதமராகும் வாய்ப்பு கூட உண்டு

      Delete