இந்திய விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மகத்தான தியாகிகள்
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு என் வீர வணக்கம்.
விடுதலைக்குப் பிந்தைய இந்தியா உழைக்கும் வர்க்கத்தின் வசம் வர வேண்டும் என்ற அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற சூளுரைப்போம்.
"நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்று சின்னஞ்சிறு வயதில் மிகப் பெரிய கருத்துச் செறிவோடு எழுதிய பகத்சிங் இன்னும் ஆட்சியாளர்களை அச்சுறுத்துகிறான்.
மூவர் நினைவுநாளை ஒட்டி ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற வாலிபர் பேரணியில் தடியடி நடத்தியுள்ளது அம்மாநில பாஜக அரசு.
வேலூரில் இன்று நடைபெற இருந்த இளைஞர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது இடைக்கால எடப்பாடி அரசு.
வெள்ளை ஏகாதிபத்திய அரசை அச்சுறுத்திய பகத்சிங்கைக் கண்டு, இன்றைய ஆட்சியாளர்களும் நடுங்குவது ஏன்?
பகத்சிங் எழுப்பிய முழக்கம், பகத்சிங் உயர்த்திப் பிடித்த சோஷலிச லட்சியம், அவர்களை அச்சுறுத்துகிறது. காவிப்படைக்கு கூடுதலாகவே பகத்சிங் என்றால் பயம் வருகிறது. தங்களால் மூளைச்சலவை செய்யப்படும் இளைஞர்களை விடுவிக்கும் சக்தி பகத்சிங்கிற்கு உண்டு என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது.
பின் குறிப்பு: இதனை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. மூன்றாண்டுகள் முன்பாக மக்களவைத் தேர்தலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விருதுநகரில் ஒட்டிய ஒரு சுவரொட்டியை பாஜக ஆட்கள் கிழித்துப்போட்டு, இது ஒரு தேசத்துரோக நடவடிக்கை என்பதாக காவல்துறையிலும் புகார் கொடுத்தார்கள்.
பாஜக பார்வையில் இதுதான் தேசத்துரோகம். இந்த வாசகங்களைத்தான் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வளவு பயம் . . . . .
No comments:
Post a Comment