அயோத்தி பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற ஆலோசனையை சொல்லியுள்ள மரியாதைக்கு உரிய நீதியரசர்களே,
அதிகாரம் அத்தனையையும் கையில் குவித்துக் கொண்டு ஆணவமாய் திரியும் தரப்பு, அதுதான் அராஜகமாய் மசூதிக்குள்ளாக திருட்டுத்தனமாய் சிலையை வைத்தது, உங்களின் முன்னோர்கள், ஆம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை காலில் போட்டு மிதித்து மசூதியை இடித்துத் தள்ளி, இந்தியாவின் நற்பெயரை, சமூக நல்லிணக்கத்தை சீரழித்தது. இன்னும் வெறி அடங்காமல், சொல்லப் போனால் ஆட்சி கையில் உள்ள திமிரோடு சாராயம் குடித்த குரங்காய் வலம் வருகிறது.
அந்தத் தரப்போடு பாதிக்கப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் சட்டத்திற்கோ, நியாயத்திற்கோ இடமிருக்குமா?
பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றால் இத்தனை ஆண்டுகள் இழுத்தடித்தது ஏனோ?
இபிரச்சினையில் சட்டபூர்வமான தீர்ப்பை அளிக்க வழியில்லையா அல்லது சட்டபூர்வமான தீர்ப்பை அளித்து ஆளும்கட்சியின் வெறுப்பை ஏன் தேடிக்கொள்ள வேண்டும் என்று தப்பி ஓடுகிறீர்களா? யார் தரப்பு பலவீனமாக உள்ளதோ, அவர்கள்தான் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள விரும்புவார்கள். அதனால்தான் சங் பரிவாரம் உங்கள் ஆலோசனையை வரவேற்றுள்ளது. அதனை மறுப்பவர்களுக்கு தேச விரோதி பட்டமும் வழக்கம் போல கிடைக்கும்.
ஆனால் ஒன்று,
ஆலமரத்தடி பஞ்சாயத்து ரேஞ்சில்தான் உங்களால் செயல்பட முடியும் என்றால் எதற்கு நீதிமன்றங்கள்?
நீங்க எல்லாமும் எதற்கு?
இப்படி ஒரு ஆலோசனையைக் கொடுத்ததற்கு பதில் ராஜினாமா செய்திருந்தால் அது நேர்மையாக இருந்திருக்கும் யுவர் ஆனர்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete