பாஜகவின் கூட்டாளிக்கட்சியான எம்.பி ரவீந்திர கெய்க்வாடை தங்களின்
விமானத்தில் ஏற்ற முடியாது என நான்கு விமானக் கம்பெனிகள் தடை விதித்துள்ளனர்.
கூட்டமைப்பில் இல்லாத இன்னும் இரண்டு விமானக் கம்பெனிகளும் கூட தடையை ஒப்புக்கொண்டுள்ளனர்.
உண்மையிலேயே இது பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. ஆளும் கூட்டணிக்கட்சியைச்
சேர்ந்தவர், ரௌடிக் கட்சி உறுப்பினர் என்று பார்க்காமல் தங்களின் அதிகாரி
ஒருவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக ஒரு சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில்வேயும்
இது போன்ற நடவடிக்கை எடுத்தால் நல்லது. எல்லா இடத்திற்கும் நடந்தே போகட்டும்.
விமானக் கம்பெனிகளின் நடவடிக்கை நல்லது. காவல்துறை எடுக்கப் போகும்
நடவடிக்கை என்ன? பாதிக்கப்பட்டவர் புகார் கொடுத்துள்ளார். அராஜகம் செய்தவர் “ஆம்,
இருபத்தி ஐந்து முறை செருப்பால் அடித்தேன்” என்று சொல்லியுள்ளார். “சுட்டேன்,
சுட்டேன், குண்டுகள் தீரும் வரை சுட்டேன்” என்று ஜெனரல் டயர் சொன்னது நினைவுக்கு
வந்தது. செருப்பால் அடிப்பது என்பது கடும் தண்டனைக்குரிய குற்றம். காவல்துறை முதல்
தகவல் அறிக்கை பதிவு செய்து அந்த மனிதனை முதலில் கைது செய்ய வேண்டும். வழக்கு
நடத்தி சிறைக்கு அனுப்பிட வேண்டும்.
அடுத்த நடவடிக்கையை நாடாளுமன்றம் செய்திட வேண்டும். மக்களவை சபாநாயகர் இந்த
மனிதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும். இப்படிப்பட்ட இழி குணம் கொண்டவர்கள்
எல்லாம் எம்.பி யாக இருந்து எதுவும் கிழிக்கப் போவதில்லை.
ஆளும் கட்சியின் கூட்டாளி என்பதால் குற்றவாளியை பாதுகாக்க யாராவது
முயற்சிப்பார்களானால்????/
நிச்சயம் நடக்கும்.
என்ன செய்யலாமென்று அப்போது சொல்கிறேன். அதுவரை அந்த மனிதன் பயன்படுத்திய
செருப்பை பத்திரமாக, பாதுகாத்திடுங்கள்.
இந்த பா(த)ணி அனைவருக்கும் பொருந்த வேண்டும். பொருந்துமா?!. பொறுத்திருந்து பார்போம்.
ReplyDeleteஇவர் இந்த குற்றத்தை செய்த போதே எம்.பி பதவிக்கான தகுதி, எதிர்காலத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் இழந்துவிட்டார்.
ReplyDelete