Saturday, March 4, 2017

துரோகத்துறை அமைச்சகம் ????????



காங்கிரஸ் அரசுக்கும் மோடி அரசுக்கும் ஒரே ஒரு அம்சத்தில் மட்டும் ஏகப் பொருத்தம். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு இந்தியப் பொருளாதாரத்தை அடகு வைப்பதிலும் அவர்கள் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவதிலும் இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசமே கிடையாது. இதிலே மோடி ஒரு முரடர், முட்டாள்  என்பதால் தங்களின் வேலைகளை வேகமாக நிறைவேற்ற மிகவும் அனுசரணையாக இருப்பார் என்று பழைய பொம்மை மன்மோசனை தூக்கி விட்டு புதிய பொம்மை மோடியை கொண்டு வந்தார்கள் முதலாளிகள்.

அந்த விசுவாசத்தில் முதலாளிகளின் தரகராகவே மாறிப் போனவர் மோடி. நாடோ, நாட்டு மக்களோ நாசமாகப் போனால் அவருக்கு கவலை இல்லை. அவருடைய இன்னொரு எஜமானனான ஆர்.எஸ்.எஸ் ஏவும் கட்டளைகளை நிறைவேற்றினால் அதுதான் அவருக்கு மகிழ்ச்சி.

இந்த இரண்டரை ஆண்டு ஆட்சிக்காலத்தில் மோடி நிறைவேற்றிய அனைத்து சட்டங்களும் நடவடிக்கைகளூம் முதலாளிகளுக்கு ஆதரவானது மட்டுமே.

இந்த வரிசையில்  மோடி அரசு ஒரு புதிய சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம் அது.

தற்போதைய சட்டங்களின்படி நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றினால் அந்த நிறுவனத்தை அரசு அனுமதி இல்லாமல் மூட முடியாது. (ஆனாலும் நோக்கியா, ஃபாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் மூடின. இந்தியச் சட்டங்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகள் அளிக்கும் மரியாதை அவ்வளவுதான்)

இப்போது கொண்டு வரவுள்ள திருத்தத்தின்படி முன்னூறு தொழிலாளர்கள் என்று வரம்பை உயர்த்தப் போகிறார்கள். மூவாயிரம் என்று மாற்ற வேண்டும் என்பதுதான் முதலாளிகளின் விருப்பம். இப்போது முன்னூறு என்று தொடங்கி படிப்படியாக அதனை உயர்த்தும் திட்டமும் அரசுக்கு உள்ளது.

ஒரு தொழிற்சாலை தொடங்கும்போது அரசு அளிக்கும் சலுகைகள் ஏராளம். நிலம், மின்சாரம், நீர் என்று மட்டுமல்லாமல் வரிச்சலுகை, வரி விடுமுறை என்றெல்லாம் அள்ளித்தரப் படுகிறது. அரசு கொடுக்காமல் இவர்களே எடுத்துக் கொள்கிற முக்கியமான சலுகை “குறைந்த கூலிக்கு தொழிலாளர்கள்”.

எல்லா சலுகைகளையும் அனுபவித்து விட்டு இதற்கு மேல்  அந்த இடத்தில் கூடுதல் லாபம் பெற முடியாது என்ற நிலை வருகிறபோது “இந்த மடம் இல்லையென்றால் அடுத்த மடம்” என்று தொழிற்சாலைகளை மூடி விட்டு போய்க்கொண்டே இருப்பார்கள், கடைசியில் நடுத்தெருவில் நிற்பது தொழிலாளர்கள்தான்.

ஏற்கனவே தொழிற்சாலைகளை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்வது என்பதை மோடி கைவிட்டு விட்டார். எல்லாம்  முறையாக நடக்கிறது என்று அவர்களே ஒரு தன்னிலை அறிக்கை கொடுத்துக் கொண்டால் போதும் என்று சொல்லி விட்டார்கள்.

இப்போது இந்த எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டால் ?????//

நாட்டில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின்  எண்ணிக்கை முந்நூறுக்கும் குறைவுதான் உலகமயம் உருவாக்கிய ஒரு மோசமான விளவாக பல பெரிய நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஒரே தொழிற்சாலையில் தாங்களே நேரடியாக உற்பத்தி செய்வதற்குப் பதிலாக அவுட்சோர்ஸிங் முறைக்கு மாறியது. வேறு பல நிறுவனங்களோ, குறிப்பாக ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார, ஏற்றுமதி அபிவிருத்தி மண்டலங்களுக்குள் ஒளிந்து கொண்டு தொழிலாளர் நலச்சட்டங்கள் எங்களுக்கு பொருந்தாது என்று கை  கொட்டி சிரிக்கின்றன.

இன்னும் பல மசோதாக்களை வேறு மோடி அரசு தயாராக வைத்துள்ளது. அவை எல்லாமே தொழிலாளர்களுக்கு எதிரானது. தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வது, ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு, போனஸ் உச்சவரம்பை அகற்றுவது, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகள் உள்ளது, அவற்றைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கும் உரிமைகளை பறிப்பதற்கும் நடுத்தெருவில் நிறுத்தவும் திட்டமிடுகிறது மோடியின் தலைமையிலான மத்திய அரசு. பண்டாரு தத்ராயா (ஆம் ரோஹித் வெமுலாவை  தற்கொலைக்கு துரத்திய குற்றவாளிகளில் ஒருவர்தான்) அமைச்சராக இருக்கும் இத்துறைக்கு தொழிலாளர் நல அமைச்சகம் என்று பெயர். துரோகத்துறை என்று பெயர் மாற்றினால் பொருத்தமாக இருக்கும்.  

ஆனால் இந்த துரோகம் நிகழ்வதை இந்திய தொழிலாளி வர்க்கம் அனுமதிக்காது. உறுதியோடு எதிர்த்து போராடும். முறியடிக்கும்

 

5 comments:

  1. மூட வேண்டிய பல நச்சாலை களை மூடாமல், அய்யா காமராஜர் திறந்த பல ஆலைகளை மூடுவது கலக கலாச்சாரம். அதை கண்டும் காணாமல் போவது தே('ச்')சீய கலாச்சாரம். கூலிக்கு கூவு தல் புதிதாக கண்டு பிடிக்க பட்ட கலாஸ் சாரம்.

    ReplyDelete
  2. You have to educate the so called labors to turn against bjp and congress.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. I have long back informed that Fascist Liers have no place in my page. If you want me to remove your absurd comments to garbage, welcome

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete