உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடைசி கட்ட தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில்
நேற்று மத்தியப்பிரதேசத்தில் ஒரு ரயிலில் வெடிகுண்டு வெடிக்க, கண்ணும் கருத்துமாய்
அந்த வெடிகுண்டு வைத்தவனும் கொல்லப்பட்டு விட்டான்.
இந்த வெடிகுண்டின் நேரம் சந்தேகத்தை உருவாக்குகிறது.
சில வாரங்கள் முன்பாக கான்பூர் அருகே நடந்த ரயில் விபத்தை தீவிரவாத
தாக்குதல் என்றும் எல்லைக்கு வெளியே இருந்து வந்து வெடிகுண்டு வைத்தார்கள் என்று
பிரச்சாரக்கூட்டங்களில் மோடி முழங்கினார்.
ஆனால் உத்திரபிரதேச மாநில ரயில்வே காவல்துறை டி.ஜி.பி சில நாட்கள் முன்பாக
மோடியின் பேச்சு ஒரு அர்த்தமற்ற, அபத்தமான பொய்க்குற்றச்சாட்டு என்பதை சொல்லாமல்
சொல்லி விட்டார்.
ஒரு வெடிகுண்டு வெடித்ததற்கான எந்த தடயமும் அங்கே இல்லை என்றும்
தண்டவாளங்கள் பழுதானதால்தான் விபத்து ஏற்பட்டது என்றும் அவர் சொல்லி விட்டார்.
மோடி கான்பூர் பற்றி சொன்னது பொய் என்று அம்பலமாகி விட்டது. .உபி நிலவரம்
ஒன்றும் அவ்வளவு சாதகமாகவும் இல்லை. கான்பூரில் குண்டு வெடிக்காவிட்டால் என்ன,
உஜ்ஜயினில் வெடித்து விட்டது. குண்டு வைத்த ஆளையும் பிடித்து கொன்று விட்டார்கள்,
இன்று தேர்தலில் முடிந்தவரை அறுவடை செய்திருப்பார்கள்.
இப்படியெல்லாம் நடக்குமா என்று சந்தேகமே வேண்டாம்.
கலவரம் நடந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும் என்று சொன்னவர் அமித்ஷா. போலி
சி.டி தயாரித்து முசாபர்நகரில் கலவரம் செய்தவர்கள் அல்லவா?
பொய் சொல்லியோ இல்லை இப்படி ஏதாவது தில்லுமுல்லு செய்தோ இல்லை மத வெறியை
தூண்டி விட்டுத்தானே பாஜகவால் வெற்றி பெற முடியும். அவர்களுக்கும்
நேர்மைக்கும்தான் சம்பந்தமே கிடையாதே!
பின் குறிப்பு : போலி தேச பக்தர்கள் வசவாட வழக்கம் போல அனாமதேயங்களாகவும் நேரடியாகவும் பொங்கி வருவார்கள். தயவு செய்து என் நம்பிக்கையை பொய்த்து விடாதீர்கள்.
அரசியலும்,வெடிகுண்டும் இல்லைனா
ReplyDeleteஇந்தியாவுக்கு ஏது மரியாதை...?