Wednesday, March 15, 2017

ஒன்னா சேராதே- போய்யா வேலையைப் பாத்துகிட்டு






சமீப காலமாக தொழிற்சங்க உரிமைகளை முடக்குவதற்கான பல முயற்சிகளை மோடி அரசு செய்து வருகிறது. மத்தியரசின் கட்டளைகளை நிறைவேற்றும் ஆயுதமாக  பொதுத்துறை நிறுவன நிர்வாகங்களை மாற்றி வருகிறது.

இது குறித்த விரிவானதொரு கட்டுரையின் தமிழாக்கத்தை  நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன்பாக

பி.எஸ்.என்.எல்  நிர்வாகம் அங்கேயுள்ள அங்கீரக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் அமைப்பிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.

உங்கள் உறுப்பினர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறதோ, அதைத் தாண்டி வேறு பிரச்சினைகள் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. ஊழியர் சங்கங்களும்  அதிகாரிகள்  அமைப்புக்களும்  கூட்டு  இயக்கம் எதுவும் அமைக்கக்கூடாது. இணந்து  எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பதே அக்கடிதத்தின் சாராம்சம்.

தொழிலாளியும் அதிகாரியும் ஏண்டா ஒற்றுமையா இருக்கீங்க? தனித்தனியா இருந்தா உங்களை அடிக்க வசதியா இருக்குமே என்பதுதான் அக்கடிதம் சொல்லும் செய்தி.

பி.எஸ்.என்.எல்  ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் அபிமன்யு கொடுத்துள்ள பதில் சூடானது.

ஊழியர் சங்கங்களும் அதிகாரிகள் அமைப்புக்களும் கூட்டு இயக்கம் அமைத்து போராடி வருவதால்தான் நிறுவனத்தை இதுநாள் வரை பாதுகாக்க முடிந்துள்ளது. சேவையை மேம்படுத்து. நுகர்வோரை மகிழ்ச்சிப்படுத்து என்று பல கூட்டியக்கங்கள் நடத்தி வருகிறோம். இதை விரும்பாத ஏதோ அதிமேதாவி மூளையில்தான் இப்படிப்பட்ட விபரீத யோசனைகள் உருவாகி இருக்கும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இரு கடிதங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 




மோடியரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.

No comments:

Post a Comment