என்.ஜி.ஓ படம்,
இயற்கை விவசாயம் பற்றிய டாகுமெண்டரி படம்.
இவையெல்லாம் திரைப்படத்துறை வித்தகர்கள் எழுதியிருந்தவை. அவ்வளவு ஞானமெல்லாம் நமக்கு கிடையாது. அதனால் ரசித்து பார்க்க முடிந்த ஒரு படம்.
ஜோதிகாவின் சிறப்பான நடிப்பிற்காகவே அவசியம் பார்க்க வேண்டிய படம்.கணவன் மற்றும் மகள் உதாசீனம் செய்யும் போது குலைந்து போவதிலும் அதிகாரியிடம் திட்டு வாங்கும் போது மறுகுவது, அந்த கோபத்தை சாதாரண ஜனங்களிடம் காண்பிப்பது, சக ஊழியரிடம் சிடுசிடுப்பது, வெறுப்பேற்றுவது, ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது பெருமைப்படுவது, அந்த சந்திப்பு சொதப்பலாகி பலரும் நக்கல் செய்யும் போது கூனிக் குறுகி பம்முவது, பின்னர் அதற்கு முகநூலில் பதில் கொடுப்பது என்று நவரசம் பொழிந்திருக்கிறார்.
திருமணம் ஒரு பெண்ணின் கனவுகளை எப்படி முடக்குகிறது என்றும் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதும்தான் கதை.
தான் தன் சுகம் என்று வாழும் கணவன்களை ரகுமான் தத்ரூபமாய் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். சுய நலத்தை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள் என்று ஆண்களுக்கு அறிவுரை செய்யும் இப்படத்தை ஆண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இன்னும் ஒட்டியிருக்கும் கொஞ்ச நஞ்ச கசடை போக்க வேண்டும் என்று சுய விமர்சனம் செய்து கொள்ள இப்படம் எனக்கு உதவியது.
இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு சுயநலம் பீடித்தவர்களாய் இருக்கிறது என்பதையும் இப்படம் உணர்த்துகிறது.
ரசாயன உரங்களால் பாதிக்கப்பட்ட மண்ணைப் பற்றியும் காய்கறிகளில் செய்யப்படுகிற கலப்படம் பற்றியும் அழுத்தமாகவே காட்சிகள் அமைந்திருக்கிறது.
கல்யாண ஆர்டருக்கான காய்கறி தயாராகி அனுப்பும் வேளையில் கறிகாய் மொத்தச்சந்தை வியாபாரி இளவரசு எங்கே வில்லன் போல வந்து சண்டைக் காட்சிகள் வந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டே இருந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நிகழவில்லை.
ஆண்களின் சுய நலத்தை சாட்டையால் அடித்து பெண்களின் தன்னம்பிக்கைக்கு உற்சாகம் அளிக்கும் இப்படத்தை அவசியம் பாருங்கள் என்று சொல்ல இன்னொரு முக்கிய காரணம் உண்டு.
சமீப காலத்தில் கொஞ்சமும் ஆபாசமோ, விரசமோ இல்லாமல் கண்ணியமான் காட்சியமைப்புக்களோடு வந்த படம் இது.

அவசியம் பார்க்கிறேன் நண்பரே
ReplyDeleteநன்றி
நீங்க சொன்னபடியால் தியேட்டரில் பார்க்கலாம்.
ReplyDeleteசென்றவாரம் தான் பறந்து கொண்டிருக்கும் போது கத்தி, போலிஸ் திருடன் படம் இலவசமா பார்த்தேன். ஒரு மூன்று மாதங்களுக்கு இவை போதுமுங்க.