Tuesday, May 12, 2015

கணக்கில் சிக்கல் இல்லையென்றால் இனியாவது?




எங்கள் பகுதியில் உள்ள மோசமான சாலைகள் பற்றி முன்பு எழுதியிருந்த பதிவின் இணைப்பு இங்கே  உள்ளது. 

சாம்பிளுக்கு இரண்டு படங்கள்



 
இணைப்பிற்கு சென்றால் இன்னும் சில அரிய காட்சிகளைப் பார்க்கலாம்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பாக சாலையில் ஜல்லியைக் கொட்டினார்கள், மணலைக் கொட்டினார்கள், ஜல்லித் தூளையும் கொண்டு வந்து குவித்தார்கள். சட்டமன்ற தொகுதிக்கோ இல்லை மாநகராட்சி வார்டிற்கோ இடைத்தேர்தல் வராமலேயே எங்கள் சாலையை புதுப்பிக்கப் போகிறார்களே என்று மகிழ்ச்சியடைந்தேன்.

கொண்டு வந்த ஜல்லி, மணல், ஜல்லித் தூள் எல்லாவற்றையும் நிரவி குழிகளை வேறு அடைத்து விட்டார்கள்.

சரி இன்னும் ஓரிரு நாளில் தார் சாலை தயாராகி விடும் என்று எதிர்பார்த்தேன்.
                                                  
ஆனால் நாற்பத்தி ஐந்து நாட்கள் கடந்த பின்னும் சாலை கீழே உள்ள புகைப்படங்களில் இருப்பது போலத்தான் இருக்கிறது.




சரி, ஜெ வெறும் மக்கள் முதல்வராக தன்னுடைய மாளிகைக்குள் ஒடுங்கி இருக்கிற போது “உங்களுக்கெல்லாம் நல்ல ரோடு தேவையா?”
என்று மாநகராட்சி முடிவு செய்திருக்கும் போல என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டேன்.

நீதிமான் குமாரசாமி கைங்கர்யத்தில் இனி மக்கள் முதல்வர் பதவியைத் துறந்து சாதாரண முதல்வராக மாறப் போகிறார்.

பாதியில் நிறுத்தி வைத்துள்ள சாலைப் பணியை இனியாவது வேலூர் மாநகராட்சி முழுமை செய்யும் என்று நம்புகிறேன்.

இல்லை ஒதுக்கீடு செய்த பணத்தில் நீதிமான் குமாரசாமி தீர்ப்பின்படி ஊழலுக்கான இருபது சதவிகித ஒதுக்கீடு போக மீதமுள்ள தொகையில் இதற்கு மேல் சாலை போட எதுவுமில்லை என்று சொன்னாலும் அதிர்ச்சியடையாமல் தாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன்.

நீதிமான் போட்ட கணக்கையே தாங்கிக் கொள்ள முடிகிற போது மாநகராட்சி கணக்குகள் எம்மாத்திரம்?

No comments:

Post a Comment