கொஞ்சம் கூச்சத்தோடும் சற்று அச்சத்தோடும் இந்த
பதிவை எழுதுகிறேன். தற்பெருமையாகவோ சுய புராணமாகவோ பார்ப்பதற்கான வாய்ப்பும்
இருக்கிறது என்ற உணர்வோடே எழுதுகிறேன்.
தமிழ்மணத்தின் வலைப்பக்கங்கள் பட்டியலில் முதல் இடம்
கிடைத்துள்ளது. பதிவிட வேண்டிய அளவிற்கு இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்ற
கேள்வி கூட எழுந்தது.
பள்ளியிலோ இல்லை கல்லூரியிலோ படித்த எந்த
காலத்திலும் நான் முதல் ரேங்க் வாங்கியதே இல்லை. சிறு வயதில் கிடைக்காத முதல்
ரேங்க் ஐம்பது வயதை நெருங்கும் போது கிடைத்துள்ளது என்பதுதான் இதில் மகிழ்ச்சி
தரக்கூடிய ஒரே விஷயம்
தொடர்ச்சியாக நான் எழுதிக் கொண்டிருப்பதும் ஏற்கனவே
தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் இப்போது அவ்வளவாக எழுதாமல் இருப்பதும் கூட
எனது வலைப்பக்கம் இந்த இடத்திற்கு வருவதற்கான காரணமாக இருக்கும்.
அது போல இந்த இடம் என்பது நிலையானது இல்லை என்ற
புரிதலும் நிச்சயமாக இருக்கிறது. மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் அல்லவா?
என் எழுத்துக்கள் மூலம் அப்படியே சமூகம் திருந்தி
விடும், மாறி விடும் என்ற பிரமையெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் பல்வேறு
பிரச்சினைகளில் ஒரு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனின் பார்வையில் எனது
கருத்துக்களை பதிவு செய்து வருகிறேன். வருவேன்.
ரொம்பவும் சீரியசா போய்க்கிட்டு இருக்கோ என்ற கேள்வி
வரும் போது இளையராஜா பாடல்கள் மூலமும் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம்
நான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன். சமையல் குறிப்பு எழுதி கொஞ்சம் இடைவெளி
வந்து விட்டதல்லவா? இந்த ஞாயிறு களம் புகலாம்.
எத்தனையோ நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தது
வலைப்பக்கத்தின் பாசிட்டிவ் பக்கம் என்றால் முகத்தை மூடிக்கொண்டு வக்கிரத்தோடும்
வன்மத்தோடும் ஏன் ஜாதி வெறியோடு கூட பின்னூட்டம் போடும் அனானிகள் நெகடிவ் பக்கம்.
ஆனால் இதெல்லாம் வாழ்வின் அங்கம்தான். சிங்கம்
வாழும் காட்டில்தானே நரிகளும் வாழ்கிறது?
எண்ணற்ற பதிவர்கள் அளித்துள்ள உற்சாகமே இந்த
முதலிடத்திற்கு காரணம்.
திரு ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்களும் திரு பந்து
அவர்களும் துவக்க காலத்தில் உற்சாகம் அளித்தவர்கள். இப்போது திரு கரந்தை
ஜெயகுமார், திரு வேகநரி, திரு கில்லர்ஜி, மற்றும் பனிமலர், ஹமீது என பலர்
தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் செழுமைப்படுத்தி வருகின்றனர்.
வலைப்பக்கத்தில் பின்னூட்டம் போடாமல் முகநூலில்
கமெண்டு போடும் பலர் உள்ளனர். ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு ப.இசக்கிராஜன் சார்,
வேலூரில் எங்கள் கோட்ட மேலாளராக இருந்த போது நடத்திய காரசார விவாதத்தை இப்போதும்
தொடரும் திரு வி.எஸ் சார், புதுவைத் தோழர் சாய் ஜெயராமன், எங்கள் போளூர் செயலாளர்
தோழர் சங்கர், என்று முடிவில்லா நீண்ட பட்டியலே உண்டு.
சில பெயர்கள்
கண்டிப்பாக விடுபட்டிருக்கும்.
அவர்களுக்கும் சேர்த்து ஒரே வார்த்தையில் சொல்லி
முடிக்கிறேன்.
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
தங்கள் பதிவுகளுக்கு நான் கருத்துரைகள் அதிகம் தந்ததில்லை. எப்போதோ ஒன்றிரண்டு தந்ததுதான். ஆனாலும் உங்களது கட்டுரைகளை தமிழ்மணத்தில் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். தொழிற்சங்கப் பணிகள் மற்றைய பணிகள் – இவைகளுக்கு இடையிலும் தமிழ்மணத்தில் தொடர்ந்து எழுதி தமிழ்மணம் – FIRST RANK பெற்ற தங்களுக்கு எனது உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள். இந்த தமிழ்மணம் – FIRST RANK தொடர்ந்து தங்கள் தளத்தினில் நிலை பெறட்டும்.
ReplyDeleteஉங்களது வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.
DeleteThanks for remembering me
ReplyDeleteஉங்களை மறக்க முடியுமா சார்?
Deleteநல்ல காலம் நீர் பள்ளியிலோ கல்லூரியிலோ முதல் மாணவனாக வரவில்லை ! வந்திருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான தொழிற்சங்க தலைவர் கிடைத்திருப்பாரா !! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
ReplyDeleteஅனைத்துப் புகழும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கே. ஏ.ஐ.ஐ.இ.ஏ எனும் பல்கலைக் கழக மாணவன் நான்
Deleteவாழ்த்துகள்... அனானிகள் சார்பில்!. (நாங்களும் தொழில் வர்க்கமே காட்டில் நரி அல்ல!!)
ReplyDeleteஒவ்வொரு முறையும் ஜிமெயில் உள்ளே நுழைந்து பின்பு பின்னுட்டம் இட சோம்பேறி தனமே காரணம். மற்ற படி உங்கள் உழைக்கும் மக்கள் பார்வை நன்றே.
நன்றி. என்ன அனானிகளிலும் நல்ல அனானி, கெட்ட அனானி என்று இருக்கிறார்களே, நான் குறிப்பிட்டுள்ளது வேண்டுமென்றே முகத்தை மூடிக் கொண்டு வன்மத்தை உமிழ்பவர்களைத்தான். அதில் சிலர் யார் என்பதும் எனக்கு தெரியும்.
Deleteபடிக்கும் பழக்கமும்
ReplyDeleteஎழுதும் பழக்கமும்
வேகமாய்
வெகுவேகமாய்
குறைந்து கொண்டிருக்கும்
காலம் நண்பரே இது.
இக்காலத்தில் பல் வேறு பணிகளுககு இடையிலும்
தொடர்ந்து எழுதுவது என்பதே ஒரு சாதனைதான்
சாதனைமேல் சாதனையாக
தமிழ் மனத்தில் முதலிடம்
தொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கக் காத்திருக்கிறேர்ம்
வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்த்துக்கள்
மிகுந்த நன்றி நண்பரே, நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteமனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்
Deleteநல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்
DeleteCONGRATS
ReplyDeleteThank You Comrade
Deleteவாழ்த்துகள் நண்பரே.....
ReplyDeleteமனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்
Deleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்கிறேன்.
மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்
Delete