Saturday, May 23, 2015

விதி மீற்லையே விதியாக



மரங்களை வெட்டி அழித்து
மழையில்லை என ஏங்குவோம்.

ஏரிகள் மேலே வீடுகளமைத்து
குடங்கள் சுமந்து நீருக்கலைவோம்.

நதி போகும் பாதை தடுத்து
ஊருக்குள் வெள்ளம் புகுந்த்தென்று
புகாரும் சொல்வோம்.

மலைகளை உடைத்து
மாளிகைகள் சமைப்போம்.

நதிகள் கலக்கும் கடலில்
கழிவுகளை கலந்து
மீன்களின் சுவை மாறியதாய்
குறையும் சொல்வோம்.

இயற்கையன்னை சீறும் போது
ஒரு சொட்டு கண்ணீர் சிந்தி,
அரை நிமிடம் அஞ்சலி செலுத்தி

விதிகளை மீறுவதையே
விதியாகக் கொண்டு
எப்போதும் போல்
எல்லாவற்றையும் நாசப்படுத்தி

அடுத்த பேரழிவிற்குக் காத்திருப்போம்
இயற்கையை குறை சொல்ல.


1 comment:

  1. விதிகளை மீறி மீறி
    பேரழிவை அழைப்பிதழ் கொடுத்தல்லவா
    அழைத்துக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete