Wednesday, May 27, 2015

வேலூர் வெயிலூரா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது



தென் மாவட்டங்களில் பயணம் செய்த போது உணர்ந்த ஒரு உண்மை என்னவென்றால் வேலூரில் மட்டும் வெயில் அதிகமாக இல்லை. தமிழகம் முழுதிலுமே அப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது.

வேலூர் மட்டுமில்லை, தமிழகத்தின் ஒவ்வொரு ஊருமே வெயிலூர்தான். ஆனால் இதை புரிந்து கொள்ளாமல் தமிழகத்தின் பிற ஊர் மக்கள் வேலூர் மக்களை பரிதாபமாக பார்க்கிறார்கள் அல்லது எப்படித்தான் அங்க இருக்கீங்களோ என்று நக்கல் செய்கிறார்கள்.

நேற்று முன் தினம் திருச்செந்தூரில் ஒரு கடையில் கரும்புச்சாறு பருகுகையில் அந்த கடைக்காரர் “எந்த ஊருங்க நீங்க” என்று கேட்டதற்கு வேலூர் என பதிலளித்ததும் “பாவங்க நீங்க, அங்க ஓவர் வெயிலாமே” என்று பரிதாபப்பட்டார்.

வழக்கமான வேலூர் வெயிலை விட அன்று திருச்செந்தூரில் வெப்பம் தகித்துக் கொண்டிருக்கிறது. அந்த வெப்பத்தோடு அவர் சொன்னதும் சேர்ந்து கொள்ள “இதோ இப்ப உங்க ஊரில அடிக்கிறதை விட வேலூரில குறைவுதான் என்று நான் சொல்ல, என் சகலையோ "எங்க ஊரில குளிர் காலத்துல சாயந்தரம் ஆறு மணிக்கு ஸ்வெட்டர் போடாம வெளிய வர முடியாது. இங்க அப்படியா?” என்று கேட்க அவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

“நீ எதற்கு பேசுகிறாய், நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வேலூரை பழிப்பவர்களுக்கு இன்று இயற்கையே பதிலடி கொடுத்து விட்டது.

மாலை மூன்று மணி இருக்கும். ஒரு சில விஷயங்கள் குறித்து முதுநிலை கோட்ட மேலாளரிடம் விவாதிக்க படியேறுகையில் வாசலில் பெரும் ஓசை. என்னமோ ஏதோ என்று பதைபதைத்து வந்தால், வானத்தில் ஓட்டை விழுந்து இருக்கும் மேகமெல்லாம் அப்படியே கீழே விழுவது போல அப்படி ஒரு பெரு மழை. முதல் சில நிமிடங்களில் அடித்த காற்று எங்கே மழையை கடத்திச் சென்று விடுமோ என்ற அச்சம் இருந்தாலும் வென்றது மழைதான். 


இதோ இன்னும் பெய்து கொண்டிருக்கிறது.  நடுவில் கொஞ்ச நேரம் கூட இடைவெளி கொடுக்காததால் ந்னைந்து கொண்டுதான் வீட்டிற்கு வந்தேன். 

இதோ இந்த படம் மாலை சரியாக ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு எடுக்கப் பட்டது. எப்படி இருள் கவிழ்ந்து கொண்டுள்ளது பாருங்கள். 



இனி யாரும் வேலூரை வெயிலூர் என கிண்டல் செய்யாதீர்கள். அப்படி கிண்டல் செய்யும் முன் உங்கள் ஊரின் வெப்ப நிலை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்குப் பின் பேசுங்கள்.


14 comments:

  1. வேலூர் வெயிலூரா? அப்படியெல்லாம் சொல்லக் கூடாது = அருமை சார். உங்கள் பதிவு படித்து நீண்ட காலங்கள் ஆகின்றன. = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார்
    Swaminathan Raman

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா

      Delete
  2. http://ramaniecuvellore.blogspot.in/2014/05/blog-post_12.html
    http://ramaniecuvellore.blogspot.in/2014/06/blog-post_542.html
    http://ramaniecuvellore.blogspot.in/2014/09/blog-post_15.html

    sir,
    indha post-kalil irundha
    comment's ???
    Y.Anna

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்ல வரீங்க சார்?

      Delete
    2. வேலூரில் வெயில் இல்லை என்று நான் சொல்லவில்லை. இப்போது வேலூரில் மட்டும் வெயில் உள்ளது என்று சொல்லாதீர்கள் என்றுதான் வலியுறுத்துகிறேன்

      Delete
  3. கொஞ்சம் அந்த மழையை பிடித்து வையுங்கள் ராமன். நான் வேலூர் போகிறேன் என்றவுடனே இங்கே அனைவருக்கும் வேர்த்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. தைரியமா வாங்க சார்

      Delete
  4. அடுத்த வாரம் பார்க்கலாம் எப்டின்னு .....!

    ReplyDelete
  5. இனி அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம்

    ReplyDelete
  6. appadiya!!nallavela mazha peiyarathukum antha kattumaramthan karanamnu sollama vittaye!!!

    ReplyDelete
    Replies
    1. பாவம் உனக்கு பைத்தியம் முற்றி விட்டது போல

      Delete
  7. appadiya? saringa thambi.. vaila vada

    ReplyDelete
    Replies
    1. உன் பின்னூட்டங்களே உனது மன நிலையைச் சொல்கிறது. சீக்கிரம் போய் டாக்டரை பாரு, இல்லையென்றால் பைத்தியம் முற்றி சட்டையைக் கிழித்துக் கொண்டு அலையும் நிலை வந்து விடும். அப்போதும் நீ விடாமல் அபத்தமாய் பின்னூட்டம் போட்டுக் கொண்டு இருப்பாய்.

      Delete