நேற்று நள்ளிரவு சி.எம்.சி
மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்
பிரச்சினை குறித்து முன்பே சில முறை எழுதியுள்ளேன். அதனால் தொலைபேசி மூலம் ஆட்டோவை
வரவழைத்து பாதுகாப்பாக சென்ற போது சாலையில் பார்த்த காட்சிகள் மூன்று.
பீட் போய்க்கொண்டிருந்த
ஒரு சப் இன்ஸ்பெக்டரும் ஏட்டும் துரத்தப்பட்டார்கள்.
கணவன், மனைவி வாகனத்தில்
செல்ல மனைவியின் கையிலிருந்த குழந்தையை குறி பார்த்து துரத்தியது ஒரு தெரு நாய்க்
கூட்டம்.
மருத்துவமனைக்கு
அருகாமையிலேயே ஒரு பசு மாட்டை பத்து நாய்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டிக்
கொண்டிருந்தன.
கூடுதலாக இன்னும் ஒரு
செய்தி. :எங்கள் அலுவலக வளாகத்தில் திரிந்து கொண்டிருந்த ஏராளமான தெரு நாய்களை
வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு பதினைந்து நாட்கள் முன்பாக பிடித்துச் சென்றனர்.
அவற்றில் பெரும்பாலான நாய்கள் மீண்டும் எங்கள் அலுவலகத்தையே தேடி வந்து விட்டன.
இவற்றின் பாதிப்பில்
உருவான கவிதை போன்ற வடிவம் கீழே.
நாய்கள், நாய்கள்,
எங்கெங்கும் நாய்கள்
சாலைகள், சத்திரங்கள்
எங்கெங்கும் சுதந்திரமாய்
சுற்றித் திரியும்.
காவலர், கள்வர்
வேறுபாடு தெரியாது.
நல்லவர், கெட்டவர்
பேதமும் புரியாது.
அள்ளி அணைக்க வரும்
மழலையென்றும் அறியாது.
பசுவோ, கன்றோ
இல்லை பன்றிதானோ
நள்ளிரவோ, நடுப்பகலோ
காலக்கணக்கு ஏதுமின்றி
வெறித்த கண்களோடே
எச்சில் ஒழுகும் வாய் காட்டி’
கோரைப்பல் கொண்டு
கடித்து குதறும் வெறியோடு
நாய்கள், நாய்கள்
எங்கெங்கும் நாய்கள்.
மனிதர்களை அச்சுறுத்த.
ஒரே பயங்கரமாக இருக்கிறது.
ReplyDelete//எங்கள் அலுவலக வளாகத்தில் திரிந்து கொண்டிருந்த ஏராளமான தெரு நாய்களை வேலூர் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு பதினைந்து நாட்கள் முன்பாக பிடித்துச் சென்றனர். அவற்றில் பெரும்பாலான நாய்கள் மீண்டும் எங்கள் அலுவலகத்தையே தேடி வந்து விட்டன.//
வெறியோடு திரியும் நாய்கள் மீது பாசம் கொண்ட மத்திய அமைச்சர் தான் காரணமா! கொடுமை.
ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். இரவு மணி பதினொன்றை தாண்டினால் போதும் நாய்களின் சாம்ராஜ்யம்தான். உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடக்க வேண்டியுள்ளது. இந்த நாய்களுக்காக போராடுபவர்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?
ReplyDeleteநகராட்சி ஊழியர்கள் இப்பொழுதெல்லாம் நாய்களைப் பிடிப்பதில்லை
ReplyDeleteபிடித்தாலும் குடும்பக் கட்டப்பாடு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தெருவில்
விட்டுவிடுகிறார்களாம்
The solutions are two pronged: efficient garbage collection and sterilisation of the dogs.
ReplyDelete