Wednesday, May 13, 2015

குமார சாமி சார், வட போச்சே


வங்கிக் கடனை வருமானமாக சேர்த்து, வீடு கட்டிய செலவுக் கணக்கைக் குறைத்து, வளர்ப்பு மகனுக்கு திருமணம் நடந்ததா என்று கேட்டு, கிருஷ்ணாணந்த் அக்னிஹோத்ரி வழக்கை தூசி தட்டி 8.12% எல்லாம் ஊழலே கிடையாது என்று மூன்று நிமிடத்தில் தீர்ப்பு சொன்ன நீதிமான் குமாரசாமி சார் கடைசியில பத்தாம் கிளாஸ் கணக்கு பரிட்சையில பெயிலான ப்சங்களை விட  மோசமா கணக்கு போட்டுட்டாருனு இப்பதான் தெரியுது.

இதுக்குதான் அண்ணன் வடிவேலு சொல்ற மாதிரி

"எதையும் ப்ளான் பண்ணி செய்யனும்"

விடுதலை செய்யறதுனு முடிவு செஞ்சாச்சி. அப்புறம் எதுக்கு தேவையில்லாம தப்புக் கணக்கு போட்டீங்க.


இப்ப பாருங்க, வடிவேலு அண்ணன் மாதிரியே உங்களையும் ஆளாளுக்கு போட்டு அடி பின்றாங்க.

எந்த குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் கிடையாதுனு ஒரு வரி தீர்ப்பு எழுதி ஒரு நொடியில சொல்லிட்டுப் போயிருக்கலாம் இல்ல?

இப்ப பாருங்க, உங்க நியாயப்படியே அவங்க முறைகேடா சேர்த்த சொத்து வருமானத்தை விட இருபது சதவிகிதத்துக்கு மேல போயிடுச்சே, என்ன செய்யப் போறீங்க?

முன்னாடி பேசினதெல்லாம் இனிமே நடக்குமா?

"வட போச்சே"



 

2 comments:

  1. அதானே விடுதலை செய்யறதுன்னு முடிவு செஞ்ச பின்பு தப்புக் கணக்கு எதற்கு? எவ்வளவு ஊழல் மோசடி செய்யலாம் என்ற அறிவுரை வேறு! கொடுமை.

    ReplyDelete
  2. Indha madhiri purambokku galai ellaam serupaala adikkanum.

    ReplyDelete