இரண்டு நாட்கள் குடும்பத்தோடு நெல்லை, பாபநாசம், மணிமுத்தாறு, திருச்செந்தூர், கன்னியாகுமரி என்று ஒரு பயணம் மேற்கொண்டு இன்று மதியம் வீடு திரும்பினேன்.
பயண அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன். அதற்கு முன்பாக ஒரு வேதனைக் காட்சியை மட்டும் இங்கே பதிவு செய்கின்றேன்.
கன்னியாகுமரியில் உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலையைப் பார்க்கும் போது மனதில் பெருமிதம் வருகிறது. அச்சிலையைப் பார்க்கையில் திருக்குறளின் பெருமை மனதிற்கு வருகிறது. திருக்குறள் தமிழிற்குச் சேர்த்த பெருமை மனதிற்கு வருகிறது. யாமறிந்த புலவரிலே வள்ளுவனைப் போல யாரையும் காணவில்லை என்று பாரதி பாடியது நினைவிற்கு வருகிறது. திருக்குறள் சொல்லியபடி ஆட்சியாளர்கள் ஆட்சி நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஆதங்கம் வருகிறது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்களுக்கோ திருவள்ளுவர் சிலையைப் பார்த்தால் அதை வடிவமைத்த கலைஞர்தான் நினைவுக்கு வருகிறார் போலும்!
அதனால்தான் திருவள்ளுவர் சிலையை புறக்கணிப்பது என்று முடிவெடுத்து நடைமுறைப்படுத்துகின்றனர் போலும்!
ஆம்,இரவு அகஸ்தியபுரம் ஊராட்சி அமைத்துள்ள சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்காக அமைத்துள்ள இடத்தில் அங்கே கதிரவன் மறையும் வரை இருந்து விட்டு மீண்டும் கன்னியாகுமரி திரும்பி வருகையில் பார்க்கும் போது
விவேகானந்தர் நினைவு மண்டபம் ஓளி வெள்ளத்தில் காட்சி தந்து கொண்டிருக்க திருவள்ளுவர் மட்டும் இருளில் மூழ்கியிருந்தார். சிலையின் கருமையோடு இருளின் கருமை நிறமும் கலந்து போய் அங்கே வானுயர்ந்த ஒரு சிலை இருப்பதே தெரியவில்லை.
அதிமுக அரசு கலைஞர் நிர்மாணித்த சிலையை புறக்கணிப்பதாக நினைத்துக் கொண்டு திருவள்ளுவரை இழிவு படுத்துகிறது. திருக்குறளை உதாசீனம் செய்கிறது. தமிழை களங்கப்படுத்துகிறது.
உற்சாகத்தில் திளைக்கும் ஆட்சியாளர்கள் கண்களுக்கு திருவள்ளுவரின் பரிதாப நிலை புலப்படாது என்பதே யதார்த்தம்.
ஒரு பிரம்மாண்ட உறை தயாரித்து அதைக் கொண்டு திருவள்ளுவர் சிலையை மூடாமல் இருந்தால், அதுவே பெரிய விஷயம் என்பதுதான் இன்றைய இன்னொரு யதார்த்தமும் கூட.
neethan poi oru light potuvidu!! ithey velaya pochu unaku..
ReplyDeleteஇருக்கிற லைட்டை போடச் சொல்லு அனானி. முகத்தை மூடினாலும் உன் கொண்டை நல்லாவே தெரியுது...
Deleteஒரு முறை லாரி மோதியதாக கூறி சென்னையில் கண்ணகி சிலையை அப்புறப்படுத்தியது போல வள்ளுவர் மீது கப்பல் எதுவும் மோதாமல் இருந்தால் சரிதான்.
ReplyDeleteஆகா, நாமே இப்படி ஐடியா தந்துட்டோமே
Deleteஇருளில் திருவள்ளுவர்
ReplyDeleteவேதனை தரக்கூடியக் காட்சிதான் நண்பரே
உரியவர்கள் சரி செய்வார்கள் என நம்புவோம்
இந்த ஆட்சியாளர்களிடம் எனக்கு என்னமோ நம்பிக்கை வரவில்லை நண்பரே
Deleteenakavathi konda theriyuthu!! aana unaku pulugarathu theriyuthu!!haha
ReplyDeleteஅறிவாளி கண்டு பிடிச்சுட்டாரு! புளுகு மூட்டைகள்தான் பிறரை அப்படி சொல்வார்கள். உன் சொந்த அடையாளத்தோடு வர முடியாத போதே, உனது பலவீனம் தெரிகிறது
Deleteஅம்மா ஆட்சியை பார்த்து மனதில் பெருமிதம் கொள்ள பழகிக்குங்க. அப்படி தான் தமிழக அறிவாளிங்க சொல்கிறார்கள்.
ReplyDeleteஅவலம். யாரை மிதிக்கிறார்கள் என்று தெரியாமல் இப்படி செய்கிறார்கள்.
ReplyDeleteநம் பாட்டனை இழிவு செய்கிறோம் என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
திறமை இருந்தால் வேறு இடத்தில் இதை விட பெரிய சிலை வைத்து பெருமை அடைய வேண்டியது தானே. தனக்கும் முடியாது... அடுத்தவனையும் விடாது..