Tuesday, May 12, 2015

மோடி ஒரு பூஜ்ஜியம் - இந்து முன்னணி சேம் சைட் கோல்




எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் இந்து முன்னணியின் கூட்டம் ஒன்று ஒரு முப்பது பேரோடு பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது.

காய்கறி வாங்கும் நேரத்தில் ஒரு பேச்சாளர் வீராவேசமாக முழங்கிக் கொண்டிருந்ததை கேட்க வேண்டிய நிர்ப்பந்தம். மேடைக்குப் பின்னாலே காய்கறிக்கடை என்பதால் முகத்தைப் பார்க்கவில்லை. அதனால் அந்த உணர்ச்சி மிக்க பேச்சாளர் யார் என்று தெரியவில்லை. திராவிடர் கழகத் தலைவர் வீரமணியை நிமிடத்திற்கு ஒரு "டேய்" போட்டு அழைத்து சவால் விடுத்த அந்த பேச்சாளர் கூறியது பின்வருமாறு.

"டேய், நாங்களா பெண்களை மதிப்பதில்லை? நாங்கள் படிக்கும் புத்தகத்தை சரஸ்வதியாக பார்க்கிறோம். எண்ணும் பணத்தை லட்சுமியாக பார்க்கிறோம். குடிக்கும் நீரை கங்கையாக பார்க்கிறோம். ஆண் பாதி, பெண் பாதி என்று அர்த்தனாரியாக வைத்திருக்கிறோம். டேய் மனைவி இல்லையென்றால் எங்களைப் பொறுத்தவரை கடவுளே பூஜ்ஜியம்தான். தெரியுமாடா?"

வாஸ்தவமான பேச்சு.

மனைவி இல்லாத பிரம்மச்சாரி கடவுள்களான வினாயகரும் அனுமனும் கூட அந்த இந்து முன்னணி தலைவர் பார்வையில் பூஜ்ஜியம்தான் போலும்.

கடவுளே பூஜ்ஜியமென்றால் மனைவியில்லாத மனிதர்களும் கூட பூஜ்ஜியம்தானே!

மனைவியை ஒதுக்கி வைத்த மோடியும் கூடத்தானே?

அட, அந்த கூட்டத்திற்கான பேனர்களில் காட்சியளிக்கும் வீரத்துறவியார் ராம கோபாலன் கூட அந்த வரையறைக்குள் அடங்குவார்தானே!

இதையெல்லாம் நான் சொல்லலீங்க.

இந்து முன்னணி கூட்டத்தில் இந்து முன்னணி பேச்சாளர் சொன்னதுதான்.
 

3 comments:

  1. கடவுளே பூஜ்ஜியமென்றால் மனைவியில்லாத மனிதர்களும் கூட பூஜ்ஜியம்தானே !
    மனைவியை ஒதுக்கி வைத்த மோடியும் கூடத்தானே ?
    நியாயமான கேள்விதான் நண்பரே...

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கூட்டத்தில பேசின இந்து முன்னணி ஆளைப் போய் அதே கெட்ட வார்த்தையில திட்டு அனானி. உங்களுக்கெல்லாம் நாகரீகமே தெரியாதா? எல்லாம் காட்டுமிராண்டியாவே இருக்கீங்க, நீங்க எல்லாம் படிச்சவனுங்கதானே?

      Delete