தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இரண்டாவது மாநில மாநாடு விருதுநகரில் நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்கு கடந்த ஏழாண்டுகளாக புதிய பரிமாணம் கொடுத்துள்ளது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் அகற்றும் போராட்டம் தொடங்கி தீ.ஒ.மு சாதித்துள்ள வெற்றி க்ணிசமானது. ஆனால் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. தீண்டாமைக்கும் சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் வலுப்பெறும் சூழலில் ஆதிக்க சக்திகள் தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள ஜாதிய உணர்வை தூண்டிக் கொண்டே இருக்கின்றன.
தர்மபுரி கலவரமும் அதிகரித்து வரும் அகௌரவக் கொலைகளுமே இதற்குச் சான்று.
இந்த சூழலில் அடுத்த கட்ட இயக்கங்களை இன்னும் கூர்மையாக எடுத்துச் செல்வது குறித்து மாநாடு விவாதித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்டு களம் கண்ட நேரத்தில் அதன் இயக்கங்களிலிருந்து ஒதுங்கியிருந்த புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் திரு தொல்.திருமாவளவன் நாளை பிரதிநிதிகள் மாநாட்டில் பேசவுள்ளார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி அதன் செயல்பாட்டில் தீவிரமாக இருக்கிறது என்பதை மட்டுமல்ல, விரிவான ஒற்றுமைக்கான அவசியம் உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.
நாளை மாநாட்டின் நிறைவு நாளில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது. பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். தமிழகமெங்கும் தோழர்கள்விருதுநகர் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இதோ இன்னும் சில நிமிடங்களில் எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு வேனில் புறப்படுகிறோம்.
வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
நாளை மறுநாள் சந்திப்போம்
பின் குறிப்பு : தலித் செயல்பாட்டாளரும் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனுமான டாக்டர் ஆனந்த் டெல்டும்டே நேற்று மாநாட்டை துவக்கி வைத்த காட்சி புகைப்படத்தில். அவரது உரையை தமிழாக்கம் செய்தது எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் தோழர் எம்.கிரிஜா
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ReplyDeleteகட்சியின் முன்னாள் தலை
வர்... மறைந்த வரதராஜனி
டம் ....குமுதம் செய்தியா
ளர் ஒருவர் கேள்வி கேட்கி
றார்....கேள்வி சாதாரணமானதுதான்...
உடனே பதில் வருகிறது
வரதராஜனிடமிருந்து....
திண்டுக்கல் பெருமாள் நாயுடு பேரன் னா அங்க உள்ள குழந்தைக்கு கூடத்
தெரியும் ...நான் அந்தப்
பெருமாள் நாயுடுவோட பேர
னாக்கும்.--- நல்லா ஒழி(ளி)க்கிரான்கப்பா
why did you delete my comment?
ReplyDeleteதோழர் என்.வி காலமான போது அவருக்கு எண்பத்தி ஐந்து வயதிற்கு மேல் இருக்கும். அவரது தாத்தா காலம் என்னவென்று கணக்கு போட்டுக் கொள்ளவும். ஜாதியை பெயரோடு இணைத்துக் கொள்வது என்பது நடைமுறையில் இருந்த, சமூக சீர்திருத்த சிந்தனைகள் வேர் பிடிக்காத காலமது. தந்தை பெரியாரைக் கூட அவரது ஜாதியோடே இணைத்து அழைத்தார்கள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.
ReplyDeleteமேலும் தோழர் என்.வி தான் அவர் குடும்பத்தின் முதல் கம்யூனிஸ்ட், அவர் தாத்தா அல்ல. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துவக்கத்திற்கும் அதன் வெற்றிகரமான இயக்கங்களுக்கு அடித்தளமிட்டவர் தோழர் என்.வி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு என்பதை சாத்தியமாக்கியதில் தோழர் என்.வி அவர்களின் பங்கு அளப்பறியது.
அப்படிப்பட்ட உன்னதமான தோழரை ஜாதியக் கண்ணோட்டத்தில் பார்ப்பது உமது கண்களின் கோளாறு. தீக்கதிர் வாங்கிப் படியும். பல தலித் அமைப்புக்கள் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பற்றி கூறியதை அறிந்து கொள்ளவும்.
ஆனால் உம்மை குறை சொல்லி என்ன பயன்? கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் சில போலிகள் ஜாதிய உணர்வோடு அடுத்தவரைப் பார்க்கும் அவலமும் இருக்கிறதே