Friday, May 29, 2015

தங்கத்தில் டாய்லெட் – அடுக்குமா இது?



ஆடம்பரக் கல்யாணங்களைப் பற்றி நிறையவே படித்திருக்கிறோம், கேள்விப் பட்டுள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை முதல் ஆடம்பரத் திருமணம் என்பது வளர்ப்பு மகனின் திருமணம். (அப்படியெல்லாம் அக்கல்யாணத்திற்கு ஜெ செலவு செய்யவில்லை என்று நீதிமான் குமாரசாமி சொல்லி விட்டது வேறு விஷயம்) அதற்குப் பிறகு சஹாரா நிறுவன மோசடி புகழ் சுப்ரதோ ராய் குடும்பத் திருமணங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆடம்பரத் திருமணங்கள் நடந்து விட்டது. இனியும் நடக்கும்.
                      
சீதனங்களை வாரி வழங்குவார்கள். கார் வாங்கித் தருவார்கள், பங்களாக்கள் வாங்கித் தருவார்கள், வெளிநாட்டிற்கு தேனிலவிற்கு அனுப்புவார்கள், தீவுகள் கூட வாங்கித் தருவார்கள். விமானங்கள் கூட வாங்கித் தரப்படலாம்.

ஆனால் சவுதி அரேபிய மன்னன், தனது மகளின் திருமணத்திற்கு தங்கத்தில் டாய்லெட் செய்து கொடுத்தாராம் (ஜெ அம்மையாரின் முதல் ஆட்சிக் காலத்தில் அவர் செல்லும் எல்லா ஊர்களிலும் பொதுக்கூட்ட மேடைக்குப் பக்கத்தில் அமைக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட கழிப்பறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது நினைவிற்கு வருகிறதா?)






பணக் கொழுப்பு அல்லது அபரிமிதமான பணம் உருவாக்கும் வக்கிரம் என்று இதைச் சொல்ல முடியும்.

மண மகளின் திருமண ஆடைக்கு மட்டுமான செலவு நூற்றி எண்பது கோடி ரூபாயாம்.

பாவம் இந்த ஆடையை அணிவதற்கு அந்தப் பெண் என்ன கஷ்டம் பட்டதோ? அதை விடப் பாவம் அந்த மணமகன்! மனைவியின் அருகில் இருப்பது கூட தெரியாமல் ஒடுங்கி அமர்ந்திருக்கிறான்!

17 comments:

  1. அலைவரிசை ஊழலில் அடித்த கொள்ளையில் பல தீவுகள்
    விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். ஒரு விமானகம்பனியின் பங்குகள்
    விலை போயிருக்கிறது. வீட்டிலேயே டெலிபோன் இணைப்பகம்
    அரசாங்க செலவில்.

    ReplyDelete
  2. பணக் கொழுப்பு அல்லது அபரிமிதமான பணம் உருவாக்கும் வக்கிரம் என்று இதைச் சொல்ல முடியும்.

    Good Post!
    Unmaiyil communisa katchi thevaiyulla Naadu idhudhaan!!!

    communism valarka yethenum muyarchi seithullarkalaa!!!

    Y.Anna.

    ReplyDelete
  3. This is complete fake news, how come raman believed this kind of news?
    why did arab wrote Chinese or Vietnamese language on the toilet name?

    i believe most of the your blogs are same like this!!!

    real golden toilet is http://www.complex.com/music/2013/05/the-20-dumbest-rapper-purchases/russell-simmons-gold-toilet

    ReplyDelete
    Replies
    1. http://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=7&cad=rja&uact=8&ved=0CDMQFjAG&url=http%3A%2F%2Findiatoday.intoday.in%2Fgallery%2Fgold-toilet-gifted-by-arab-king-to-daughter%2F1%2F13125.html&ei=-xlpVcOmBJTnuQSBpYPoCw&usg=AFQjCNHCsDtcmldwY6GZ7NcXkyNFd2LrCw&bvm=bv.94455598,d.c2E

      இந்த இணைப்பிற்குச் சென்று பாருங்கள் திரு எம்ஏகே. அதற்குள்ளாக குமாரசாமி மாதிரி அவசரப்பட்டு தீர்ப்பு கொடுத்து விட்டீர்களே. அதுவும் ஒட்டு மொத்த வலைப்பக்கத்தைப் பற்றியும் அபாண்டமாக எழுதி விட்டீர்களே. நாட்டாமை தீர்ப்பை மாத்து என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது

      Delete
    2. Most of the photos from eshowbizbuzz.com, nothing else, if you think indiatoday (you) is correct, both should give proper evidence, instead of publishing fake news, Thanks Siva, I proved myself, i am not like kumarsamy, you proved once again, your blogs are same like this. some proverb 'arandavan kannukku irundathellaam pei' ,'Aadatheriyaathavanukku ....'

      Delete
    3. Sorry Mr MAK, Your sweeping comments proves that You are Kumarasami. Because I had nearly written 2000 posts and you are making comment on entire thing on the basis of one post for which the source is a reputed magazine. எது எப்படி இருந்தாலும் தங்கத்தில் டாய்லெட் என்பது நிஜம்தானே! அது பணக் கொழுப்புதானே. அந்த செய்தியில் தவறு கிடையாதே! எவன் அதைச் செய்திருந்தாலும் அந்த பணத் திமிர் கண்டிக்கப் பட வேண்டியதுதானே. எம்.ஏ.கே, ஆட்கள் மாறியிருக்கலாம். விஷயம் சரிதான். ஆகவே நான் ஆடத் தெரியாத ...... இல்லை. வார்த்தைகளில் கண்ணியத்தை எதிர்பார்க்கிறேன்

      Delete
    4. Sorry I am not ment to hurt you & for wrong proverb. I don't think so any one will use this kind of toilet, it's likely more showcase. Hope I will get more good blogs from you. Once again sorry for my comments.

      Delete
    5. Its ok. looking forward for objective reviews

      Delete
  4. வக்கிரம் என்பது சரியான வார்த்தையாகத்தான் தெரிகிறது
    நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இதை விட இன்னும் கடுமையான வார்த்தை தமிழில் இல்லை

      Delete
  5. ithellam arasilella sagajam boss!! pallu irukaravan pakoda sapadran!! unakenna kodauthu??????

    ReplyDelete
    Replies
    1. பல் உள்ளவனை தங்கத்துல பக்கோடா செஞ்சு சாப்பிடச் சொல்லு. அப்போ பார்ப்போம். இதனால நமக்கென்ன என்று அலட்சியப் படுத்தி விட்டு போனால் ?

      Delete
  6. இந்தியா டுடே குழுமத்தின் செய்தி என்பதினால் அப்படியே நம்பிவிட்டீர்கள் போல. இரு நாட்களுக்கு முன்புதான் கை தெரியுமாறு புர்க்கா போட்டதால் கடைக்குள் பெண்களை விட சவுதி அரேபியாவில் மறுத்தனர் என செய்தி வந்தது. அப்படி இருக்க (செத்துப்போன)மன்னரின் மகளையா இப்படி போட்டோ எடுத்துப் போட சவுதிக்காரர்கள் விடுவார்கள். அது சுத்தமான போலி செய்தி!

    மெராக்கோ நாட்டில் நடந்த ஒரு திருமண போட்டோவையும் 2011-ம் ஆண்டு உலக கக்கூஸ் மாநாட்டில் ஒன்றேகால் கோடி ரூபாயில் காட்சிக்கு வந்த டாய்லட்டையும் இணைத்து இந்த டூபாக்கூர் செய்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதை இந்தியா டுடே குழுமம், டைம்ஸ் ஆஃப் இன்டியா போன்ற இணையதளங்கள் உண்மை போல பிரசுரித்தது... அரே அல்லா.. கொடுமை!

    http://www.zawaj.com/tag/moroccan-wedding/
    http://www.dailymail.co.uk/news/article-2066170/129-000-lavatory-unveiled-World-Toilet-Expo.html
    https://www.youtube.com/watch?v=NiIy8_0gK3o

    ReplyDelete
    Replies
    1. ஜயோ சிவா அரேபியங்க புர்க்காவுக்கு வெளியே பெண் கை வெளியே தெரிஞ்சா கூட விடமாட்டாங்க. ஆனா ஆடம்பரத்தை காட்ட, காட்சிக்காக, தங்கபெறுமதியை காட்ட பெண்களை அனுமதிப்பார்கள். அதை தான் தோழரும் நம்பிட்டார்.

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. முகம் காட்ட முடியாத கோழை நீ. என் பக்கத்திற்கு வராதே என்று பல முறை கூறி விட்டேன். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றாலும் புரியவில்லை. என்னை வெறுப்பேற்ற நினைத்து நீ உன் வக்கிரத்தை அன்றாடம் காண்பித்துக் கொண்டிருக்கிறாய். இப்படியே போனால் ஊர் கூடி உன்னை கல்லால் அடிக்க வேண்டியிருக்கும்

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete