Wednesday, August 6, 2014

இவருக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்கள்

தற்போதைய காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற பதக்கங்களில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தவர் இவர்.

பிறக்கும் போதே போலியோவால் பாதிக்கப்பட்டவர். ஆனால் அந்த குறைபாடு உடலில் இருந்ததே தவிர உள்ளத்தால் பாதிக்கப்படவில்லை.  மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில்  பவர் லிப்டிங்  பிரிவில் பதக்கம் பெற்ற இவர் இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் மற்ற இயல்பான உடல் வலிமை உள்ளவர்களோடு போட்டி போட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

அந்த பெருமைக்குரிய வாகையாளர் ராஜீந்தர் ரஹூஜா
.


அவர் முகத்திலேயே தன்னம்பிக்கை தெரிகிறதல்லவா...

நீங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

2 comments:

  1. ராஜீந்தர் ரஹூஜா பாராட்டிற்கு உரியவர்
    பாராட்டுவோம்

    ReplyDelete
  2. முயற்சிக்குப் பாராட்டுக்கள் ராஜீந்தர் ரஹூஜா.

    ReplyDelete