செய்தித்தாளில் படித்தேன். எனக்கு இன்னும் அந்த
குறுஞ்செய்தி வரவில்லை. ஆனால் தனக்கு வந்த குறுஞ்செய்தியை ஒரு தோழர் காண்பித்தார்.
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரையே வாங்கி
தேச பக்தராய் இருங்கள் என்பதுதான் அச்செய்தியின் சாராம்சம்.
வாங்கும் சம்பளத்திற்கு மாதாமாதம் வருமான வரி
கட்டுகிற, வாங்கும் அரிசி, புளி முதற்கொண்டு சாப்பிடும் டீ, காபி வரை சேவை வரி
முதற்கொண்டு எல்லா வரியும் கட்டுகிற நான் மானியத்தில் சமையல் எரி வாயு சிலிண்டர்
வாங்குகிற தேசத் துரோகியாகவே இருக்க விரும்புகிறேன்.
விற்பனை வரி, இறக்குமதி வரி, கார்ப்பரேட் வரி என்று
கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருக்கிற அம்பானி உள்ளிட்ட இந்த தேசத்தின்
பிச்சைக்காரர்களுக்கு சலுகை எதுவும் கொடுக்காமல் எல்லாவற்றையும் கறாராக வசூலித்து
வங்கிக் கடனை ஏய்ப்பவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களுக்கே தேச பக்தர்
என்ற பட்டம் கொடுங்கள் ஜெய்ட்லி சார்.
நான் தேசத் துரோகியாகவே இருந்து விட்டுப் போகிறேன்.
நீங்கள் என்னவாகப் போகிறீர்கள்.
perfect writing! Good one.
ReplyDeleteI was in a dilemma of buying a petrol car instead of a diesel car. Now i have got the justification for buying a diesel car.
ReplyDeleteவரி வாங்காத அரசுதான் தேசபக்தியை பற்றி பேச முடியும்
ReplyDelete