ரஜனிகாந்தின் சாகசங்கள் பற்றி முகநூலில்
படித்தது. நான் வெகுவாக ரசித்தேன். அதனால் இங்கே தமிழில் அளித்துள்ளேன். தமிழாக்கம் செய்த்து மட்டுமே நான். ஒரிஜனல் சரக்கு
யாருடையது என்பது எனக்கு தெரியாது.
ரஜனிகாந்த் ரசிகர்கள் கோபப்படாமல் சிரித்து
விட்டு செல்வார்கள் என நம்புகிறேன்.
1) புகை
மூட்டம் காரணமாக சீன விமான நிலையங்கள் மூடப்பட்டன. பின்புதான் தெரிந்தது. அது
ரஜனிகாந்த் இந்தியாவில் புகை பிடித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் என்று.
2) ரஜனிகாந்த்
தனது மழலையர் வகுப்புக்களை ஏழு இடத்தில் படித்தார். அவைதான் இன்று ஐ.ஐ.டி என
அழைக்கப்படுகின்றன.
3) இந்தியாவில்
வசிக்க ஒப்புக்கொண்டிருப்பதால் மத்தியரசு ரஜனிகாந்திருக்கு வருமான வரி
செலுத்துகிறது.
4) சூரியனைப்
பார்த்து ரஜனிகாந்த முறைக்கும் போது பயம் கொண்டு நிலவிற்குப் பின்னால் சூரியன்
ஒளிந்து கொள்ளும். அதுவே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
5) ஒருநாள் காலையில் கண் விழித்த
ரஜனிகாந்த் தனது அறிவில் நூற்றில் ஒரு பகுதியாவது உலக மக்களுக்கு பயன்பட வேண்டும்
என்று யோசித்தார். கூகுள் உதயமானது.
6)
ரஜனிகாந்த் நூற்றி ஐம்பது
வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்
பாருங்கள். பிரிட்டிஷார் விடுதலைக்காக போராடிக் கொண்டிருப்பார்கள்.
7)
கஜனியாலும் மறக்க முடியாத ஒரே
நபர் ரஜனிகாந்த்
8) ரஜனிகாந்த் ஒரு நாள் பள்ளிக்கு மட்டம் போட்டார். அதுவே
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக மாறியது.
9)
நில நடுக்கம் ஏன் வருகிறது,
எப்போது வருகிறது தெரியுமா? ரஜனிகாந்த் தனது செல்பேசியை வைப்ரேஷன் மோடில் வைக்கும்
போது நில நடுக்கம் வருகிறது.
10)
ரஜனிகாந்த் தனது பள்ளி
நாட்களில் செய்முறை பயிற்சிக்காக செய்தவையே எகிப்தில் பிரமிடூகள் என்று
அழைக்கப்படுகிறது.
11)
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனத்தை ஏன் மூடி விட்டார்கள் தெரியுமா? எல்லா ராக்கெட்டுக்களையும் தீபாவளி
கொண்டாட ரஜனிகாந்த் வாங்கி விட்டார்.
12)
நான்கு மூலைகளில் கிணறு இருக்கிற ஒரு ஏக்கர்
நிலத்தை ரஜனிகாந்த் வாங்கினார், கேரம் போர்ட் விளையாடுவதற்காக.
13)
மிஷன் இம்பாசிபிள் என்ற பட்த்தில் நடிக்க டாம்
க்ரூஸிற்கு முன்பாக ரஜனிகாந்த் தான் அழைக்கப்பட்டார். அந்த பட்த்தின் தலைப்பு
தன்னை அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்று சொல்லி ரஜனிகாந்த் அந்த வாய்ப்பை
மறுத்து விட்டார்.
ரஜனியால் முடியாதது என்று ஏதேனும் உண்டா என்ன?
:-))))))))))))))
ReplyDeleteசிரிச்சீங்கனு எடுத்துக்கலாமா, இந்த ஸ்மைலியெல்லாம் புரிய மாட்டேங்குது
Deletefirst time in your life, you have done something good.keep it up
ReplyDeleteசந்தடிசாக்கில் தாக்கி விட்டுப் போனின்றீர்கள் அனானி, மக்களுக்கு எது நல்லதோ அதைத்தான் இன்றுவரை செய்து வருகிறேன். சிலருக்கு எது நல்லது எது கெட்டது என்று புரிவதில்லை. அவர்கள் குணம் அப்படி
Deleteரசித்தேன்
ReplyDeleteஒரிஜினல் யாரோ? தமிழாக்கம் மட்டுமே என்னுடையது நண்பரே
Delete