Friday, August 8, 2014

திமுக காரர்களை குறை சொல்லாதீர்கள் ராம கோபாலன்...


ரம்ஜான்  கஞ்சி குடிக்கும் திமுக காரர்கள்  கொழுக்கட்டை சாப்பிட வருவார்களா என்று வீரத் துறவியார் அவ்வப்போது கேட்பார். அழைத்தால் வருவேன் என்று கலைஞர் பதிலும் சொல்லியுள்ளார். ஆனால் இவரும்  அழைத்ததாக தெரியவில்லை. அவரும் சென்றதாக தெரியவில்லை.

ஆனால் இப்போது நாம் பதிவு செய்யும் செய்தி வீரத்துறவியாருக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். இன்று வேலூர் டிட்டர்  லைனில்  உள்ள கருமாரியம்மன்  கோயிலில் ஆடி வெள்ளி விழா. 

அதற்கு வாருங்கள் வாருங்கள் என வேலூரின் முன்னாள் மேயர் திமுகவின்  ப.கார்த்திகேயன்  போஸ்டர்கள், ஃ ப்ளெக்ஸ்  பேனர்கள் மூலம் அழைத்துக் கொண்டிருக்கிறார். திமுக மாவட்டச் செயலாளர் காந்தியும்  முன்னாள் எம்.பி யும் தேர்தல் பணிக்குழு செயலாளருமான முகமது சகியும்தான் சிறப்பு விருந்தினர்கள்.

இப்போது  சந்தோஷம்தானே மிஸ்டர் ராம கோபாலன்?

குறிப்பு : அந்த கோயிலே முன்னாள் மேயர் குடும்பத்திற்கு சொந்தமானது, கோயிலை ஒட்டிய ஏராளமான இடமும் வளைத்துப் போடப்பட்டுள்ளது.


5 comments:

  1. என் கணினியின் உள்ள குறைபற்றி தங்களிடம் பகிரலாம் என்று திறந்தால். தங்களின் இந்தப் பதிவைக்கண்டேன். (அது பற்றி பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது) நேரில் பேசிக்கொள்வோம்). ஆனால் மனிதத்துக்காக மட்டுமே பாடுபட்ட ஒரு அகில இந்திய தோழரின் மறைவிற்க்கு வேலூரில் அனைத்து கட்சிகள் சார்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் ஒரு உடன்பிறப்பு நம் காந்தி சிலையருகில் பேசிய கன்னிப்பேச்சு மறக்க முடியாது அவர் யார் தெரியுமா?...

    ReplyDelete
  2. நன்றாக நினைவிருக்கிறது. தோழர் சுர்ஜித் அவர்களுடைய அஞ்சலிக் கூட்டத்தில் அன்றைய மேயர் ப.கார்த்திகேயன், முகமது சகி, மதிமுக ந.சுப்ரமணி என்று எல்லோரும் பயங்கரமாக சொதப்பினார்கள். அன்றைய கூட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சார்பாக நானும் பேசினேன். தோழர் சுர்ஜித் அவர்களின் தியாகத்தை நினைவு கூற கிடைத்த வாய்ப்பு அது

    ReplyDelete
  3. Mr Anonymous, What is your problem? Better have a counseling session with a Good Psychiatrist. Hiding your identity and making sarcastic comment will make you insane

    ReplyDelete
  4. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சந்தோஷமானதே. ஆனால் அன்றைய நிகழ்வில்
    (அவர் வார்த்தையில் விழாவில்) கலந்து கொண்டதில் மகிழ்கிறேன் என்றார். அப்போது நான் அருகில் இருந்து மனதிர்க்குள் அழுதுகொண்டேன். காரணம் என் நிலை குறித்தல்ல, இப்படியே கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையாய் நம் தோழர்களை கட்டிப்போடும் அரசியல் நமக்கு தேவை இல்லை என்று என் கண் திறந்த நிகழ்வு அது.
    சரி தோழரே ஒரு வேண்டுதல்,
    என் கணினி ஒத்துழைத்தால் உங்களுக்கு அஞ்சலிடுகிறேன். ஏனெ(பி.கு) பின்னூட்டத்தில் இவ்வளவுதான் பகிர முடியும்.

    ReplyDelete