Monday, August 25, 2014

இரவின் எழிலில் எங்கேயும் இங்கேயும்

கீழே உள்ள புகைப்படங்கள் ஒரு ஆறு வருடங்கள் முன்பாக எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. 

ஆறு வருடங்களாகியும் நிலைமையில் பெரிய முன்னேற்றம் இல்லை என்பது ஒரு பெரிய சோகம். தற்காலிகமாக தீர்வு வந்தது போன்ற தோற்றம் இருந்தாலும் காற்று அடிப்பது நின்று போனால் பழைய நிலைமை வந்து விடும் என்பதுதான் யதார்த்தம்.

இன்னும் எத்தனை நாள் இங்கே மின்சாரம் கனவு? 








2 comments:

  1. முதலில் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஆதரிக்கும் உங்கள் மனநிலையை நல்ல மன நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் . இனி உங்கள் கட்சிகளின் யோக்கிதை

    இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஏன் ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாகச் செயல்படுகிறார் கள்?

    ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி விஷ்ணுகுமார், ''விவசாயிகளை இன்றைக்கும் நிலவுடமையாளர்களாவே பார்க்கிறார்கள், இங்குள்ள கம்யூனிஸ்டுகள். அதனால்தான் விவசாயிகள் நலனில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. தற்போது, தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் சிறு, குறு விவசாயிகளாகத்தான் இருக்கிறார்கள். இதனை இங்குள்ள கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். ஒ.என்.ஜி.சி நிறுவனம் இப்பகுதிகளில் பெட்ரோல்-கேஸ் எடுப்பதால், 'இங் குள்ள கிராம மக்களுக்கு வேலை கிடைக்கிறது’ என்கிறார்கள், கம்யூனிஸ்டுகள். இது ஏற்புடையதல்ல. விவசாயத் தொழிலாளர்கள், ஒ.என்.ஜி.சி-யின் ஒப்பந்தத் தொழிலாளர்களாக, அதுவும் ஆபத்தான வேலைகளைச் ஏற்கக்கூடிய கடைநிலை தொழிலாளர்களாகத்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இங்கு செயல்படுகின்றன. இத்தொழிலாளர்கள் மூலமாகவும், ஒ.என்.ஜி.சி-யின் நிர்வாகத்தின் மூலமாகவும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏராளமான நிதி கிடைக்கிறது. இக்காரணங்களால்தான் ஒ.என்.ஜி.சி-க்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள். ஒரு பிரச்னைக்காக கம்யூனிஸ்டுகள் போராடினால், அது நியாயமான போராட்டம் என்பதும்... மற்றவர்கள் போராடினால் இப்படி சேற்றை வாரி இறைப்பதும் அவர்களுக்கு வாடிக்கையே'' என வெடிக்கிறார். // கம்யுனிஸ்டுகளின் யோக்கிதையைப் பாரீர்..

    ReplyDelete
  2. இந்த பதிவின் அடிப்படை தமிழகத்தின் மின்வெட்டு. இதை திசைதிருப்பும் நீங்கள் செல்ல வேண்டிய இடம் எங்கேயோ? உங்களின் அபத்தமான வாதம் உங்கள் யோக்கியதையை அம்பலப் படுத்துகிறது. விவசாயிகள் சங்கம் கடந்தாண்டு வறட்சி நிவாரணத்திற்காக டெல்டா மாவட்டங்களில் நடத்திய முற்றுகைப் போராட்டத்தால் பலனடைந்தவர்களையும் கேட்டு சொல்லுங்கள். ஓ.என்.ஜி.சி நிர்வாகத்தின் மூலம் நிதி கிடைக்கிறது என்ற அபாண்டமான குற்றச்சாட்டு வைக்கிற நீங்கள்தான் மன நல மருத்துவரிடம் செல்ல வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பதை அதுவும் இணையதளத்தில் எதிர்ப்பதை மட்டுமே புரட்சிகர நடவடிக்கையாக கொண்டுள்ள புரட்டுக்காரர்கள் கூட்டம் அதிகரித்து விட்டது.

    ReplyDelete