காங்கிரஸ் கட்சி மக்களவைத்
தேர்தலில் பலத்த தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் மன்மோகன்,
ப.சி, மாண்டெக்சிங் அலுவாலியா ஆகிய மூவர் கூட்டணி. இந்திய மக்களின் நலனைக்
காட்டிலும் அமெரிக்க நலனே முக்கியம் என்று செயலபட்ட இந்த தேசத்
துரோகிகளால்தான் அக்கட்சி வீழ்ச்சி அடைந்தது.
இன்சூரன்ஸ்துறையில்
அன்னிய மூலதன வரம்பை உயர்த்த மோடி அரசு முடிவெடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது
என்று கூறியத்ன் மூலம் தனது அமெரிக்க விசுவாசத்தை மீண்டும் ஒரு முறை
வெளிப்படுத்தியிருக்கிறார் அந்த இந்தியத் துரோகி.
இந்த மசோதா குறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்ய செல்க்ட் கமிட்டி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது ஒரு நல்ல விஷயம். திங்கட்கிழமை மசோதா ராஜ்யசபாவிற்கு வருவதற்கு முன்பாக இந்த மனிதன் நடுவில் புகுந்து குட்டையை குழப்பி விடக் கூடாது.

ஒரு வேளை இந்த
அமெரிக்க எடுபிடியின் வார்த்தையைக் கேட்டு இனியும் காங்கிரஸ் கட்சி
செயல்படுமானால் அக்கட்சியை அழிக்க வேறு யாரும் அவசியமே இல்லை.
ஆட்சியில்
இருந்த போது இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்த அந்த அதிமேதாவி ஆட்சியில்
இல்லாத போது கட்சியை சீரழிக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்களே உஷார். வேறு
பிழைப்பில்லையென்றால் அந்த மனிதன் மீண்டும் கறுப்புக் கோட்டை மாட்டிக்
கொண்டு எந்த முதலாளிக்காவது சேவகம் செய்ய புறப்பட்டு விடுவார்.
நீங்கள்தான் நடுத்தெருவில் நிற்பீர்கள்.
No comments:
Post a Comment