கொஞ்சம் கூட கலாச்சாரமே இல்லாத அநாகரீக மனிதர்களைக்
கொண்ட கூட்டமே பாரதீய ஜனதா என்பதை அவ்வப்போது அம்பலப் படுத்தி அசிங்கப்பட்டுக்
கொள்வதே அக்கட்சிக்கு வாடிக்கையாகி விட்டது.
மரணத்தைக் கொண்டாடும் இழிபிறவிகள் இவர்கள். இலக்கிய
உலகம் கண்ணீர் வடிக்கிறது. கர்னாடக மாநில மக்கள் துயரத்தில் உள்ளனர். அந்த மாநில
அரசோ மூன்று நாள் அரசு முறை துக்கம் கடைபிடிக்கிறது. இந்திய இலக்கியத்திற்கு
பெரும் பங்காற்றியவரும் தனது படைப்புக்களின் வலிமையால் ஞான பீட விருது பெற்ற திரு
யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்கள் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.
ஆனால் இந்த இறப்பை பாஜக காரர்கள்
கொண்டாடியிருக்கிறார்கள்.
கர்னாடகத்திலும் இந்தியாவிலும் பல இடங்களிலும் வெடி
வெடித்து மகிழ்ந்துள்ளார்கள்.
மோடியை எதிர்த்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு
அசிங்கமாக நடந்து கொண்டுள்ள கீழ்த்தரமான பேர்வழிகளை மனிதர்கள் என்று சொல்வதே மனித
குலத்திற்கு இழுக்கு. எவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள் என்பதை மோடியை வரிந்து
கட்டிக் கொண்டு ஆதரித்த நல்லவர்கள்(!) இப்போதாவது
புரிந்து கொண்டால் சரி.
இவர்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டாம். மலர் வளையம்
செலுத்தி அஞ்சலி செலுத்த வேண்டாம். குறைந்தபட்ச நாகரீகமாக வாயை மூடிக் கொண்டாவது
இருக்கலாம். ஆனால் காந்தியடிகள் கொல்லப்பட்டப் போது இனிப்பு வழங்கி மகிழ்ந்தவர்கள்
அல்லவா இவர்கள்?
அடுத்தவர் மரணத்தைக் கொண்டாடும் பாரதீய ஜனதா
கட்சிக்காரர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை.
நாளை உங்களைச் சேர்ந்தவர்கள் இறந்து போகும்போது இதே
போல மற்றவர்கள் மகிழ்ந்தால் எப்படி உணர்வீர்கள் என்பதை மட்டும் சிந்தித்துப்
பாருங்கள்.
Shame
ReplyDeleteதிரு யு.ஆர்.அனந்தமூர்த்தி அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
ReplyDeleteI dont believe that this is the official stance of BJP.
ReplyDeleteCommunists are the ones doing politics on dead bodies. Shame on you, sir.
அனானி, உங்களுக்கு கம்யூனிஸ்டுகளைப் பற்றியும் தெரியவில்லை. பாரதீய ஜனதா பற்றிஉம் தெரியவில்லை. இப்படி அறிவற்றவராக இருப்பதற்கு நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும்
ReplyDelete