நாளை திமுக கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தப் போகிறார்கள். வேலூரில் அக்கட்சியின் முன்னால் அமைச்சர் எ.வ.வேலு பேசுகிறார். அதற்கான விளம்பர ப்ளெக்ஸ்களை பல இடங்களில் வைத்துள்ளார்கள்.
வேலூரில் ப்ளெக்ஸ் வைக்க மூன்று கட்ட அனுமதி வாங்கி பணம் கட்டி அந்த ரசீதையும் ப்ளெக்ஸிலே அச்சடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது என்பதையும் அதை அதிமுக மட்டுமல்லாமல் காவல்துறையும் பின்பற்றாது என்பதை நான் ஏற்கனவே எழுதியுள்ளேன்.
பரவாயில்லை இப்போது திமுகவும் தைரியமாக அனுமதி பெற்ற விபரம் இல்லாமல்தான் ப்ளெக்ஸ் வைத்துள்ளார்கள். பிரச்சினை வந்தால் பார்த்துக் கொள்வோம் என்றுதான் அனுமதி பெற்றிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
சரி இதன் மூலம் கலகம் பிறந்து நல்லது நடந்தால் சரி.
இது ஒரு விஷயமா என்று கேட்காதீர்கள். கடந்த ஆண்டு எங்கள் சங்க மாநாட்டிற்கு ப்ளெக்ஸ் வைக்க அலைந்த அலைச்சல் எங்களுக்குத்தான் தெரியும்.
அலைyathey
ReplyDeleteMister ரெண்டும் கெட்டான் அனானி, Why make absurd & irrelevant comment?
ReplyDelete