Monday, June 3, 2024

சினிமா பெயர் மட்டும்தான் பிரச்சினை . . .

 



 “வடக்கன்” என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை வெளியிட சென்சார் போர்ட் அனுமதி மறுத்து விட்டது.

 படத்தின் உள்ளடக்கத்தில் எதுவும் பிரச்சினை கிடையாதாம்.

 பின்பு என்ன காரணம்?

 “வடக்கன்” என்ற தலைப்புத்தான் பிரச்சினையாம்.

 அந்த பெயர் பிரிவினையை தூண்டுகிறதாம்.

  சென்சார் போர்ட் வெளிப்படுத்தும் ஒற்றுமை உணர்வுக்கு பாராட்டுக்கள். ஆனால் திரைப்படத் தலைப்பில் மட்டும் ஒற்றுமை இருந்தால் போதுமா?

 தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதற்கொண்டு தெய்வக்குழந்தை என்ன செய்கிறது?

 இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.

 தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக உத்திர பிரதேச மக்களை தூண்டி விட்டார்.

 ஒடிஷா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சித்தார்.

 அதே பிரிவினை உசுப்பேற்றலை கிரிமினல் ஷாவம் சீதையாக முன்பு நடித்த ஸ்மிர்தி அம்மையாரும் செய்கிறார்கள்.

 இந்த பிரிவினை முயற்சிகளை தட்டிக் கேட்க முடியாதவர்கள் தங்கள் வீரத்தை சினிமா தலைப்பில் மட்டும் காண்பிக்கிறார்கள்.

  இப்போது “வடக்கன்”  என்ற பெயர் மாற்றப்பட்டு “ரயில்” என்று புதிதாக சூட்டப்பட்டு வெளிவரவுள்ளது.

No comments:

Post a Comment