ஆட்டுக்காரன்
ஒரு மினி அவதார புருஷன் என்று நம்பி தமிழ்நாட்டில் அனைத்து இடங்களையும் பாஜகவே வெல்லும்
என்று வாயில் உமிழ்நீர் வடிய காத்துக் கொண்டிருந்த சங்கிகளுக்கு இறுதி முடிவு மிகுந்த
ஏமாற்றம் அளித்தது. நாற்பது இடங்களையும் இந்தியா அணி வெற்றி கொண்டதை தாங்கிக் கொள்ளவே
முடியவில்லை. தங்களின் துயரத்தை, ஏமாற்றத்தை, விரக்தியை, வெறுப்பை வழக்கம் போல வசை பாடி, கேலி செய்து, சிறுமைப்படுத்தி தணித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.
இந்த
ஐந்து நாட்களில் நான் பார்த்த சில …
தேங்காயை
உருட்டிக் கொண்டிருக்கும் நாய் படத்தை போட்டு அதன் மேலே 40/40 என்று எழுதுவது.
யானை
தன் தலையில் மண்ணை வாரி இறைப்பது போன்ற காணொளியை போட்டு அதற்கு தமிழ்நாட்டு மக்கள்
என்று தலைப்பு கொடுப்பது.
“இவங்களை
யாருய்யா மறுபடியும் மறுபடியும் வர வைப்பது” என்று நாடாளுமன்ற கேண்டீன் ஒப்பந்ததாரர்
சொல்வது போல மீம்.
நாற்பதை
வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி.
தமிழக
முடிவு மீண்டும் விழலுக்கு இறைத்த நீர் என்றொரு பதிவு.
டாஸ்மாக்,
கஞ்சா போதையில் மூழ்கியுள்ள தமிழன் 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டு விட்டான்.
சந்திரபாபு
நாயுடுவும் நிதீஷ் குமாரும் மு.க.ஸ்டாலினை
நக்கலாக பார்ப்பது போன்றதொரு மீம்.
மீனாட்சியம்மன்
கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கறதுக்கெல்லாம் லட்சம் லட்சமா குவியறாங்க, ஆனா கடவுள்
இல்லைன்னு சொல்ற கம்யூனிஸ்டுக்கு வோட்டு போடறாங்க . . .
இப்படி
ஏராளம், ஏராளம்.
இப்படிப்பட்ட
பதிவுகள் மூலம் சங்கிகள் சாதிக்க நினைப்பது என்ன?
“ஆப்
கி பார், சாக்கோபார்” என நானூறு இடங்களுக்கு மேல் பெறுவோம் என்று கொக்கரித்தவர்கள் தனிப் பெரும்பானமையை பெற முடியாததை, . .
கருத்துக்கணிப்பு
என்ற பெயரில் வெளியான கருத்து திணிப்பை நம்பி குதூகலித்து கொண்டாடியதை . . .
இந்தியா
அணி உருவாகும் வரை ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கட்சிகளின்
தயவை நம்பியே ஆட்சி நடத்த வேண்டிய அவலத்தை . . .
கடந்த
முறை நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட வித்தியாசத்தில் வென்ற மோடி இந்த முறை லட்சத்து
சொச்சம் வித்தியாசம் என்ற அளவிற்கு குறைந்ததை, . . .
முதல்
மூன்று சுற்றுக்களில் பின்னடைவு ஏற்பட்டு மரண பயம் உருவானதை, . ..
சீதையாய்
தோன்றிய முன்னாள் நடிகை ஸ்மிர்தி இராணி உட்பட 13 மத்திய அமைச்சர்கள் தோற்றதை . . .
காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அணி வென்றதன் மூலம் அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்டதை
அம்மக்கள் ஏற்கவில்லை என்பதை . . .
மணிப்பூர்
மாநிலத்தின் இரண்டு தொகுதிகளிலும் இந்தியா அணி வென்றதன் மூலம் கலவரக்காரர்களுக்கு மக்கள்
சவுக்கடி கொடுத்ததை . . .
ராமர்
கோயில் அமைந்த அயோத்தியிலேயே பாஜக தோற்றதை . . .
காங்கிரஸ்
இல்லாத பாரதம், கழகம் இல்லாத தமிழகம் என்ற கூச்சலை மக்கள் கொஞ்சமும் மதிக்காததை .
. .
பாஜக
இல்லாத தமிழ்நாடு, பஞ்சாப், புதுச்சேரி என்ற நிலை ஏற்பட்டதை . . .
இப்படி இந்த தேர்தல் சங்கிகளுக்கு கொடுத்த அடி மிகவும்
பலமே. மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் மறைக்கவே
சங்கிகள்
தமிழ்நாட்டு முடிவுகளை நக்கல் செய்கிறார்கள்.
நாற்பது
என்ன செய்யும் என்று கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதிய பதிவை விரைவில் பகிர்ந்து
கொள்கிறேன்.
தமிழ்நாட்டு
மக்கள் சங்கிகளை நிராகரித்து விட்டனர். அதை அவர்கள் ஜனநாயகத்தை பயன்படுத்தி செய்தனர்.
கடந்த
மூன்றாண்டுகளில் எத்தனை எத்தனை பொய்களை உலவ
விட்டீர்கள்!
2000
கோயில்கள் இடிக்கப்பட்டதாக பதிவு போட்ட ஒருவர் கூட பட்டியலை கொடுடா என்றவுடன் பதில் பேசாமல் பதுங்கி விட்டனர்.
தமிழ்நாட்டில்
உள்ள அத்தனை பேரும் எந்நேரமும் போதையிலேயே இருப்பதாக பிதற்றிக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டு
மக்கள் எல்லோரும் வேலை வெட்டி செய்ய விரும்பாத சோம்பேறிகள் என்பதால்தான் வெளி மாநில
தொழிலாளிகள் இங்கே வருகின்றனர் என்று அந்த உழைப்புச் சுரம்டலுக்கு புதிய வர்ணம் அடித்தார்கள்.
இப்படி
சங்கிகள் தமிழ்நாட்டில் பிடுங்கியது எல்லாமமே தேவையில்லாத ஆணிகள்தான்.
அதனால்தான்
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை தோற்கடித்து விட்டார்கள்.
இதை உணராமல் மேலும் மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வக்குழந்தை ஒடிஷாவில் திருட்டுப்பட்டம் கட்டி இழிவு படுத்தியது போல நீங்களும்
மீண்டும் மீண்டும் தமிழர்களை இழிவு படுத்திக் கொண்டுதான் இருப்பீர்கள் என்றால் உங்களுக்கு
இரண்டு வார்த்தைகளை மட்டும் சொல்கிறேன்.
தமிழ்நாட்டிலிருந்து
வெளியேறுங்கள்.
எங்களை
இழிவுபடுத்திக் கொண்டு, எங்களிடம் பொய்களை பேசிக் கொண்டு, எங்களுக்கிடையில் பிரிவினையை
தூண்ட முயலும் சில்லறைகளான நீங்கள் இங்கே தேவையே இல்லை.
வெளியே
போ . . .
LIC யில் நல்ல சம்பள உயர்வு வாங்கிட்டிங்க . இதுவும் பேசுவீங்க
ReplyDeleteஇதற்கு மேலேயும் பேசுவீங்க
அனாமதேய அறிவுகெட்ட முண்டமே, எல்.ஐ.சி சம்பள உயர்வுக்கும் இந்த பதிவுக்கும் என்னடா சம்பந்தம்? நீ உன் அடையாளத்தோட வந்திருந்தா மரியாதையா பதில் சொல்லியிருப்பேன். மொட்டைக் கடிதாசு எழுதற நாயி, உளவாளின்னு ஒளிஞ்சுக்கிட்டு மஞ்ச்ள் பத்திரிக்கையில எழுதற பொறுக்கி, அவனுக்கு துணை நிற்கும் அல்லக்கை சில்லறைகள் இவங்க யாருக்கும் மரியாதை கிடையாது. புரிஞ்சுதா?
Delete