உள்ளத்தை
அள்ளித்தா படத்தை பார்த்துள்ளீர்கள் அல்லவா? அதில் மணிவண்ணனை கடத்திச் செல்லும் செந்தில்,
கார்த்திக்கோடும் கவுண்டமணியோடும் பேரம் பேசுவார்.
ஐந்து
லட்சத்தில் ஆரம்பித்து நான்காயிரம் ரூபாய் வரை இறங்கி வந்து “டெம்போவெல்லாம் வச்சு
கடத்தியிருக்கோம். கொஞ்சம் பார்த்து போட்டு கொடுங்கய்யா” என்று கெஞ்சுவார்.
அந்த
டெம்ப்ளேட் யாருக்கெல்லாம் இப்போது பொருந்தும்?
கங்கணா
ரணாவத் : சண்டிகர் ஏர்போர்ட்டில கன்னத்தில அறையெல்லாம் வாங்கியிருக்கேன். பார்த்து
ஒரு அமைச்சர் பதவி கொடுங்கய்யா . . .
ஆட்டுக்காரன்
: ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, உங்க அளவுக்கு பொய் பேசியிருக்கேன். வெறுப்பரசியல்
நடத்தியிருக்கேன். ஒரு துணை மந்திரி போஸ்டாவது பார்த்து போட்டுக் கொடுங்க . . .
தமிழிசை
: ரெண்டு ஸ்டேட்டுல கவர்னரா இருந்துட்டு எலக்சனுக்காக ராஜினாமா செஞ்சேன். பார்த்து
ஒரு கேபினெட் மினிஸ்டர் பதவி பார்த்து போட்டுக் கொடுங்க..
பார்ப்போம்
யாருக்கு வாய்ப்பு கிடைக்கிறதென்று . . .
இந்த கேப்புல பட்டிமன்ற மணியையும் பரோக்கர் மணியையும் மறந்திடாதீங்க!
ReplyDeleteநாம தற்கொலைக்கோ, மரண தண்டனைக்கோ ஆதரவு இல்லையென்றாலும், இவனுங்க என்னமா பேசினாங்க?
ஏதோ ஆறுதலுக்கு, அண்ணாமலை தோற்றதுக்கு கோவையில ஒருத்தன் மொட்டை போட்டான்,
இந்த மணிகள் என்ன செய்யும்? வயிற்றுக்கு சோறுதான தின்னுதுங்க!