முந்தையதொரு பதிவில் சொல்லியிருந்தது போல நாற்பது எம்.பிக் களால் என்ன பயன் என்பது பற்றி கல்வியாளர் தோழர் இரா.எட்வின் எழுதியிருந்த பதிவை பகிர்ந்து கொள்கிறேன்
40/40 எடுத்து என்ன கிழித்துவிடப் போகிறீர்கள் என்ற கேள்வி பரவலாக வைக்கப்படுகிறது
இந்தக் கேள்வியைத்தான் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டு மக்களிடத்திலே கொண்டுபோகப் போகிறார்கள்
இதன் மூலம் எங்களால் மந்திரியாக்கக்கூட முடியவில்லை. எங்களுக்கு வாய்ப்புத் தந்தால்தானே அமைச்சராக்கி உங்களுக்கு நல்லது செய்ய முடியும்
என்ற நேரேஷனைத்தான் அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்
வேறொன்றும் இல்லை
முதலில் நாங்கள் நாற்பதல்ல
இருநூற்றி முப்பத்தி சொச்சம் நாங்கள்
இந்த எண் என்ன செய்திருக்கிறது என்றால்
என்ன சொன்னீர்கள்?
நானூறு கொடுங்கள்
ஒரே நாடாக்குகிறோம் என்றீர்கள்
அதை எங்கள் எண் உடைத்திருக்கிறது
அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்றத் துடித்தீர்கள்
இப்போது அதுகுறித்துப் பேசிப் பாருங்கள்
சந்திரபாபு நாயுடு சாரே பதில் சொல்வார்
நாட்டின் பெயரை மாற்றுவோம் என்றீர்கள்
எங்கே முயற்சி செய்யுங்கள்
இஸ்லாமியர்களை அடக்குவோம் என்றீர்கள்
பாங்குச் சத்தமே இல்லாமல் செய்வோம் என்றார் ஒரு முதல்வர்
தைரியம் இருந்தால் இப்போது அப்படிப் பேசிப் பாருங்கள்
மதத்தின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது என்றீர்கள்
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு என்று தேர்தல் அறிக்கையில் சொன்னவர் கருணை இருக்கும்வரைதான் நீங்கள் பதவியில்
பிரதமர், அது இது எல்லாம் எங்களுக்குத் தேவை இல்லை
எங்கள் எண்ணத்திற்கு மாறாக நீங்கள் ஆசைப் பட்டதை செய்ய முடியாமா உங்களால்
No comments:
Post a Comment