பாஜக
அவசர நிலைக் காலத்தை இப்போது கையிலெடுத்து ஆடி வருகிறது. சபாநாயகர் தொடங்கி ஜனாதிபதி
வரை மக்களவையில் அதைப் பற்றி பேசுகிறார்கள். ஐ.டி விங் தயாரித்துக் கொடுத்த பதிவை பெரிய
சங்கிகள் தொடங்கி சில்லறை சங்கிகள் வரை ட்விட்டரிலும் முக நூலிலும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவசர நிலைக் காலத்தை விமர்சனம் செய்து தங்களை
ஜனநாயகக் காவலர்களாக காண்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள் சங்கிகள்.
அவசர
நிலைக் காலம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம்தான். இதை எந்த தயக்கமும் இன்றி உரக்கச்
சொல்வேன். முதலாளிகளுக்கு உதவ சொத்துரிமையை மட்டும் விட்டு விட்டு அனைத்து அடிப்படை
உரிமைகளையும் முடக்கியது இந்திய அரசு.
எதிர்க்கட்சித்
தலைவர்கள் தாக்கப்பட்டனர். சிறைக்கு அனுப்பப்பட்டனர். பத்திரிக்கைகளுக்கு சென்சார்
கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்டனர். சஞ்சய் காந்தி அடித்த கூத்துக்கள் தனி.
இனியொரு
முறை இப்படி ஒரு காலம் வரக்கூடாது என்பதால் அவசர நிலைக்காலம் பற்றி நினைவுபடுத்திக்
கொண்டிருப்பது அவசியம்/
இதைப்
பற்றியெல்லாம் பேச சங்கிகளுக்கு அருகதை இருக்கிறதா?
யாருக்கு
அருகதை உண்டு என்பதை முதலில் பார்ப்போம்.
அவசரநிலைக்
காலத்தை அன்று எதிர்த்த அரசியல் கட்சிகள் எவை?
மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி,
ஸ்தாபன
காங்கிரஸ்,
திமுக
இவை
மட்டும்தான் எதிர்த்தன.
ஜெயபிரகாஷ்
நாராயணனும் கிருபளானியும் மொரார்ஜி தேசாயும்
மற்ற மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் சிறை சென்றார்களே தவிர பாஜகவின் முக்கியத்
தலைவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை. மோடி எல்லாம் அப்போது யாரென்று தெரியாத
தம்மாத்தூண்டு சில்லறை சங்கி.
இன்றைக்கு
பாஜகவில் இருக்கும் சுப்ரமணிய சாமியைத் தவிர பாஜக ஆட்கள் யாரும் எமர்ஜென்சிக்கு எதிராக
வாய் திறக்கவில்லை. பாஜகவின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய சர்சங்சாலக்
பாலாசாஹிப் தேவரஸ், இந்திரா அம்மையாருக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி இருபது அம்சத் திட்டத்தை
ஆதரித்து பிரச்சாரம் செய்வேன் என்று உறுதியளித்தார்.
அவசர
நிலைக்காலத்தை அன்று எதிர்க்காமல் அதற்கு சலாம் போட்ட சங்கிக் கூட்டத்திற்கு இப்போது
அதனை விமர்சிக்கும் அருகதை கிடையாது.
கடந்த
பத்தாண்டுகளாக மோடியின் ஆட்சி என்ன ஜனநாயகத்தை பாதுகாத்த ஆட்சியா என்ன?
அறிவிக்கப்படாத
அவசர நிலைக் காலம்தானே அது!
இப்போது மட்டும் என்ன வாழ்கிறது?
ஒத்தி
வைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் கொடுத்தால் எம்.பி க்களின் மின்னஞ்சல் முடக்கப்படுகிறது.
பேசிக்கொண்டிருக்கும்
போதே மைக் அணைக்கப்படுகிறது.
இந்த
அற்பர்கள் ஜனநாயகம் பற்றி பேசலாமா?
No comments:
Post a Comment