கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் துயரத்தையும் அளிக்கிறது.
வருடத்திற்கு ஒரு முறை இது போன்ற சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
கள்ளச்சாராய விற்பனை ஒன்றும் திருட்டுத்தனமாக நடைபெறுவதில்லை. எங்கே யார் காய்ச்சி, யார் விற்கிறார்கள் என்பதெல்லாம் போலீஸ், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள், நிர்வாகத்தை நடத்தும் அதிகாரிகள் என அதிகார வட்டத்தில் உள்ள அனைவருக்கும் நிச்சயம் தெரியும்.
ஆனால் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள், காரணம் எளிதானது. கள்ளச்சாராய வியாபாரிகள் மூலம் வரும் காசு வாயை மூட வைக்கும்.
இப்போது கள்ளக்குறிச்சி மரணங்களுக்கு காரணமான குற்றவாளிகள், அவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய கூட்டுக்களவாணிகள் அத்தனை பேரையும் கைது செய்து கடுமையான தண்டனை தர வேண்டும்.
அப்படிச் செய்தால்தான் இனி இது போன்றதொரு துயரம் நடக்காது.
No comments:
Post a Comment