சூர்யா நடித்து சிங்கம் 2 திரைப்படத்தில் ஒரு காட்சி வரும்.
லாக் அப்பில் அடைக்கப்பட்ட சர்வதேச போதைப் பொருள் மாஃபியா தலைவன் டானியை மீட்க ஒரு கும்பல் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அங்கே இருக்கும் காவலர்கள் தாக்கி, அடித்து, லாக்கப்பை உடைத்து மீட்டுக் கொண்டு செல்வார்கள். திரும்பும் போது பெட்ரோல் குண்டும் வீசி விட்டுப் போவார்கள்.
திரைப்படக்காட்சி காஷ்மீரில் நிஜமாகியுள்ளது.
ஒரு திருட்டு வழக்கிற்காக போலீஸ் கூட்டிக் கொண்டு வந்த ஒருவரை மீட்க காஷ்மீரில் குப்வாரா என்ற இடத்தில் இதே போல் ஒரு கும்பல் உள்ள் நுழைந்து போலீசை அடித்து தாக்கி அவர்களின் அலைபேசிகளையும் எடுத்துக் கொண்டு போயுள்ளது.
சினிமாவுக்கும் நிஜத்திற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.
சினிமாவில் கிரிமினல் கும்பல் தாக்கியதாக காண்பிக்கப்பட்டது.
நிஜத்தில் அந்த அக்கிரமத்தை செய்தது ராணுவம்.
ஆம்.
சத்தியமாகத்தான் . . .
தங்களின் படைப்பிரிவு வீரரை மீட்க ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் எடுத்த சட்ட விரோத நடவடிக்கை அது.
மூன்று லெப்டினன்ட் கர்னல் உட்பட 16 பேர் மீது போலீஸ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
பாதுகாப்புப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் இருக்கும்வரை ஒன்றும் நடக்காது. அந்த சட்டம் நீங்கினால்தான் ராணுவத்தின் கொட்டம் அடங்கும்.
No comments:
Post a Comment