Thursday, June 6, 2024

ஒடிஷா வெற்றி - தேர்தல் கமிஷனின் பரிசு

 


பாஜக தன்னுடைய கோட்டை என்று கருதிக் கொண்டிருந்த உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரும் இழப்பை சந்தித்த வேளையில் அதற்கு கை கொடுத்த மாநிலம் ஒடிஷா. ஒடிஷாவில் பாஜக பெற்ற வெற்றிக்குக் காரணம் தேர்தல் ஆணையம்தான்.

இந்தியா இவ்வளவு நீண்ட கால தேர்தலை இதுவரை பார்த்ததேயில்லை. மோடி பிரச்சாரம் செய்வதற்காகத்தான் பல கட்டங்களில் தேர்தல் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. தேர்தல் அட்டவணையில் செய்த வில்லங்கம் என்ன என்பது முடிவுகள் வந்த பின்னரே புரிகிறது.

தமிழ்நாட்டுக்கு  19.04.2024 அன்று  தேர்தல் முடிந்து ஐம்பது நாட்களுக்குப் பிறகே 01.06.2024 அன்று  ஒடிஷாவில் தேர்தல் நடந்தது.

 இடைப்பட்ட காலத்தில் பாஜக தமிழ்நாட்டு மக்களுக்கு  எதிராக விஷத்தை கக்கினார்கள், தமிழர்களை திருடர்கள் என்றார்கள். தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்களே ஒடிஷாவில் வேலை செய்வதாக சொன்னார்கள். ஒடிஷாவை தமிழன் ஆளுவதா என்று கேட்டார்கள்.  பூரி ஜெகன்னாதரை துணைக்கு இழுத்தார்கள்.

 தெய்வக்குழந்தை, கிரிமினல் ஜண்டா, சீதையாக நடித்தவர் தொடங்கி சில்லறைகள் வரை அனைவரும் தேர்தல் பிரச்சாரம் என்று இதைத்தான் செய்தார்கள். ஒரு தமிழரை சொல்வதற்குப் பதில் ஒட்டுமொத்த தமிழர்களையும் பேசினார்கள்.

 தமிழர்களை இழிவு படுத்தி ஒடிஷா மக்களை உசுப்பேற்றினார்கள். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து விட்டதால் அது எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற தைரியம் அவர்களுக்கு. ஆனாலும் தோற்றார்கள் என்பது வேறு விஷயம். தமிழ்நாட்டு முடிவுகள் பற்றி தனியாக எழுத வேண்டும்.

 தமிழ்நாட்டிற்கும் ஒடிஷாவிற்கும் ஒரே நாளில் தேர்தல் நடந்திருந்தாலோ அல்லது ஒடிஷாவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதாக இருந்திருந்தாலோ அல்லது கால இடைவெளி மிகக் குறைவாக இருந்தாலோ பாஜக வாயை பொத்திக் கொண்டிருந்திருப்பார்கள்.

 பாஜக விரும்பிய வண்ணம் தேர்தல் பிரச்சாரம் செய்ய வசதியாக தேர்தல் அட்டவணையை தயாரித்துக் கொடுத்தது தேர்தல் ஆணையம். அதனால்தான் ஒடிஷா மக்களை உசுப்பேற்றி அங்கே பெரிய வெற்றியை பெற்றது பாஜக. அது தேர்தல் ஆணையம் பரிசளித்த வெற்றிதான்.

 இது போல நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே அபூர்வக்குழந்தை தேர்தல் ஆணையர்களை “பொறுக்கி” எடுத்து நியமித்தது! பெற்ற எலும்புத்துண்டுகளுக்கு விசுவாசமாக வாலாட்டுவதுதானே அவர்கள் வேலை! கச்சிதமாக வாலாட்டி விட்டார்கள்…

பிகு: அயோத்தி ராமர் கைவிட்டதால் மோடி தன் சாமியை மாற்றி விட்டாராம்.

No comments:

Post a Comment