தேர்தல் முடிவுகள் குறித்து நிதானமாகத்தான் எழுதுவேன். அதற்கு முன்பாக சின்னச்சின்ன பதிவுகள்.
முதல் மூன்று சுற்று வாக்குகள் எண்ணிக்கையின் போது மோடி பின்னடைவு என்ற செய்தியை பார்த்த போது நினைவுக்கு வந்தது சுப்ரமணியபுரம் படத்தின் காட்சிதான்,
“மரண பயத்தை காண்பிச்சுட்டான் அமித்து" என்று மோடியும் ஜெய் சசிகுமாரிடம் புலம்புவது போல மோடியும் அமித்ஷாவிடம் புலம்பி இருப்பார் அல்லவா!
வாழ்க்கையில் அந்த நிமிடங்கள் மோடி பயத்தில் வியர்த்துப் போன தருணமாக இருக்கும்! தெய்வக்குழந்தைக்கு இது மறக்காது. அப்படி ஒன்றும் நீ பெரிய அப்பாடக்கர் ஒன்றும் இல்லை என்று உணர்த்திய முதல் மூன்று சுற்று வாக்காளர்களுக்கு நன்றி.
" அப்பாடக்கர் " ஆ. " அப்பாடக்கர் இல்லை " என்றா?
ReplyDeleteஅவைநாயகன்
நன்றி. சரி செய்து விட்டேன்
Delete