அன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க அடிமை ஓ.பி.எஸ் ஆட்சியில் காவல்துறையே ஆட்டோக்களை கொளுத்தி விட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது.
எடுபிடியும் தூத்துக்குடியில் செய்தது அதைத்தான்.
இன்று அதே கேடுகெட்ட வேலையை எஜமானர்களான "பில்லா, ரங்கா கிரிமினல்கள்" செய்து வருகிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அமைதியாக போராடி வருகிற புதுடெல்லி ஜமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்காக போலீஸே ஒரு பேருந்தை கொளுத்தி விட்டு பல்கலைக் கழக நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலேயே வளாகத்தில் நுழைந்து வெறித்தனமாக தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நூலகக் கட்டிடத்தில் அடைக்கலம் புகுந்த மாணவர்களை தாக்க நூலகத்திற்குள் கண்ணீர் புகை ஏவியுள்ளார்கள். அடுத்து ஹிட்லர் போல விஷ வாயு செலுத்துவார்கள் போல.
நேற்று மோடி தடுக்கி விழுந்ததை சிலர் மகிழ்ச்சியோடு கொண்டாடியது அவசியமற்றது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் இன்றைய நிகழ்வுகளை பார்க்கும் போது அந்த கொண்டாட்டம் பெரும் வலியின் வெளிப்பாடு என்றே உணர்கிறேன்.
இந்த அராஜக ஆட்சி ஒழியட்டும்.
இவர்கள் பற்ற வைத்துள்ள நெருப்பில் இவர்களே விழுந்து வெந்து சாம்பலாகட்டும்.
மக்களை தாக்குகிற இந்த கிரிமினல் பேர்வழிகள் நாசமாகப் போகட்டும்.
பிகு : பில்லா, ரங்கா கிரிமினல்களை ஆதரிக்கிறவர்கள் ஒரு நிமிடம் யோசித்து பார்க்கட்டும். இனியாவது திருந்துங்கள். இல்லையென்றால் உங்களுக்கும் இந்த நிலை வர நீண்ட காலமாகாது.
தடுக்கி விழுந்தவன் தலையில அடிபட்டு செத்திருக்கலாம்
ReplyDeleteஇப்படி நினைக்கிற அளவுக்கு நம்மை தள்ளியதுதான் "பில்லா ரங்கா கிரிமினல்" கூட்டத்தின் சாதனை
Delete