Friday, December 27, 2019

2610 கோடி ரூபாய் அச்சம் . . .



கடந்த 2018-2019 ம் நிதியாண்டில் எல்.ஐ.சிக்கு கிடைத்த லாபத் தொகையான ரூபாய் 53,214.41 கோடி ரூபாயில் மத்தியரசுக்கு அளிக்க வேண்டிய 5 % லாபப் பங்குத் தொகையான ரூபாய் 2,610.74 கோடி ரூபாயை எல்.ஐ.சி யின் சேர்மன் திரு எம்.ஆர்.குமார் நிதியமைச்சர் நிர்மலா அம்மையாரிடம் காசோலை மூலம் அளித்துள்ளார்.

இந்தியாவின் முதன்மையான நிறுவனம் எல்.ஐ.சி என்பதும் மத்திய அரசுக்கு லாபத் தொகை மட்டுமல்லாமல், வரியாகவும் முதலீடாகவும் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருப்பது எல்.ஐ.சி என்பதும் பெருமை அளிக்கிற ஒன்றாகும்.

எல்.ஐ.சி யிடம் காசோலை வாங்கியதையும் அதன் செயல்பாட்டையும் அம்மையாரே தன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளதுதான் அச்சம் அளிக்கிறது.

இவ்வளவு சிறப்பாக செயல்படுகிற நிறுவனத்தை இன்னும் உற்சாகப் படுத்த வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத தரகு அரசாயிற்றே இது!

அம்பானிக்கும் அதானிக்கும் செல்ல வேண்டிய லாபம் இப்படி ஒரு அரசு நிறுவனத்துக்கு போகிறதே என்று சிந்திக்கிற அரசல்லவா இது!

ஏற்கனவே முதலாளிகளுக்கு எல்.ஐ.சி மீது ஒரு கண் இருக்கிறது. 

இப்போது இன்னும் அதிகமாகும்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு தகவல்.

இத்தனை நாள் வரை இந்திய உழைப்பாளி மக்களின் போராட்டம் எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாகவே பாதுகாத்துள்ளது.

இனியும் பாதுகாக்கும்.

8,ஜனவரி, 2020 அன்றைய அகில இந்திய வேலை நிறுத்தம் அதற்காகத்தான். 

No comments:

Post a Comment