Monday, January 9, 2017

ஆபாச வாயை மூடுங்கள் மோடி





ஜெயமோகன் பேனாவைத் திறந்தால் கொட்டுகிற நச்சு, நீங்கள் வாயைத் திறந்தால் கொட்டி இந்தியாவை மேலும் மாசுபடுத்துகிறது. எத்தனை ஸ்வச்ச பாரத் இயக்கம் நடத்தினாலும் தூய்மைப்படுத்த முடியாத அழுகிப் போன மூளையும் இதயமும் கொண்டவரல்லவா நீங்கள்?

கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும், கறுப்புப் பணத்தை பதுக்கும் மோசடிப் பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது உங்களுக்கு வெறும் உதட்டளவு வார்த்தைதான் என்பதை நாங்கள் அறிவோம். அது உங்கள் உள்ளத்தில் இருந்திருந்தால் அதற்கான உருப்படியான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருப்பீர்கள். 

ஆனால் ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கிறேன் என்று புறப்பட்டீர்கள். திருடர்கள் அடுக்கி வைத்த நோட்டுக்களை எரித்து விடுவார்கள் என்று வாய் ஜாலம் காட்டினீர்கள். வங்கி முன்பாகவும் ஏ.டி.எம் முன்பாகவும் வரிசையில் நின்றவர்களை கறுப்புப்பணப் பேர்வழிகள் என்று ஏகடியம் பேசி கொச்சைப்படுத்தி அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காணும் சேடிஸ்ட் என்பதை நிரூபித்துக் கொண்டீர்கள். 

ஐம்பது நாளில் எல்லாம் மாறும். இல்லையென்றால் என்னை தூக்கிலிடுங்கள், உயிரோடு கொளுத்துங்கள் என்று சினிமா வசனம் பேசினீர்கள். ரொக்கமில்லா பரிவர்த்தனை என்று புது சீன் காண்பிக்க முயற்சித்தீர்கள்.

நூறு பேருக்கு மேல் இறந்தார்கள். சிறு தொழிலும் விவசாயமும் நாசமானது. மனித உழைப்பு நேரம் என்பது வரிசைகளால் விரயமானது. உங்களுடைய முந்தைய திட்டங்கள் போலவே இதுவும் படுதோல்வி அடைந்து விட்டது. எலும்புத்துண்டுகளுக்கு மயங்குகிற சில அடிமுட்டாள்களும் அயோக்கியர்களும் வேண்டுமானால் உங்களை பாராட்டலாம். ஆனால் வாக்கு கொடுத்தபடி இந்த மனிதன் தூக்கில் தொங்கினால் நன்றாக இருக்குமே என்று பெரும்பாலான மக்கள் ஏங்கினார்கள் என்பதுதான் யதார்த்தம்.

ஆனால் நீங்கள் என்னமோ நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று மூர்க்கத்தனமாக பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் மூடத்தனத்தை எதிர்ப்பவர்களை எல்லாம் "கறுப்புப்பணத்தை ஆராதிக்கும் பூசாரிகள்" என்று வர்ணனை செய்கிறீர்கள். அயோக்கியத்தனத்தின் உச்சகட்டம் இது. அடுத்து என்ன சொல்வீர்கள் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

உங்களது தவறை ஒப்புக்கொள்ளும் நாணயம் இல்லாதவர் என்பது தெரியும். ஆனால் அந்த தவறை மீண்டும் மீண்டும் நியாயப்படுத்துகிற முரடனாக இருக்காதீர்கள்.

உங்கள் தவறை திருத்திக்கொள்ள முடியாவிட்டால் குறைந்த்பட்சம் வாயையாவது மூடிக் கொண்டிருங்கள்.

ஏனென்றால்

உங்கள் வசனங்கள் உங்கள் நடவடிக்கைகளை விட ஆபாசமாக உள்ளது. 

 



 

1 comment:

  1. start your music

    https://www.youtube.com/watch?v=5ayHUNFvISE

    ReplyDelete