Sunday, January 1, 2017

ஒன்ற வைத்த யுத்தம்





2016 ம் ஆண்டின் இறுதி நாளில் அமீர் கான் நடித்த டங்கல் (தமிழில் யுத்தம்) படம் பார்த்தோம். நமக்கெல்லாம் ஹிந்தி தெரியாததால் தமிழில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதைத்தான் பார்த்தேன்.

படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கான காரணங்கள்.

கொஞ்சம் கூட ஆபாசமே இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் விளையாட்டு அமைப்புக்கள் எப்படி இயங்குகின்றன என்பதையும் வீரர்களுக்கு போதுமான உதவி கிடைப்பதில்லை என்பதையும் அம்பலப் படுத்தியது.

ஆண் குழந்தை வேண்டுமென்பதற்காக செய்யப்படும் முயற்சிகள் எல்லாம் வீண் என்பதை சொல்வதற்காக.

பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை மிகவும் அழுத்தமாக வலியுறுத்துவதற்காக.

அங்கங்கே தூவப்பட்ட மெல்லிய நகைச்சுவைக்காக.

அமீர்கான் தொடங்கி அவரது மகள்களாக (சிறு வயது மற்றும் வளர்ந்த பின்பு) நடித்தவர்களின் இயல்பான நடிப்பிற்காக.

நிஜமான விளையாட்டுப் போட்டி போலவே காட்சிகளை வடிவமைத்ததற்காக.

ஹரியானா மாநிலத்தின் கிராமத்து புழுதி மேலே ஒட்டிக்கொண்டது போல படத்தோடு ஒன்ற முடிந்தது.

படம் வெளி வந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் படத்துக்கு சென்றோம். அரங்கின் பெரும்பான்மையான இருக்கைகள் நிரம்பி இருந்தன என்பதும் குடும்பத்தோடு வந்தவர்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓரிரு குறைகள் இருந்தாலும் (எல்லா திரைப்படங்கள் போலவே க்டைசி நொடியில் கதாநாயகி வெல்வது, பயிற்சியாளரை வில்லனாக காட்டியது (நிஜ பயிற்சியாளர் கோபத்தோடு அளித்த பேட்டியை தேடிப்பிடித்து படியுங்கள்) கீதா  தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்று (வெல்வார் என்று தெரிந்தும் கூட) ஒரு பதட்டம் உருவானது என்னமோ நிஜம்.

நல்ல வேளை நம்ம அப்பா எல்லாம் பயில்வானோ இல்லை நாம் பயில்வான் ஆக வேண்டும் என்ற கனவோ இல்லாதவர் என்று எத்தனை பேர் நிம்மதி பெருமூச்சு விட்டார்களோ தெரியாது. எனக்கு அந்த உணர்வு வந்தது.

காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து யார் அவ்வளவு கஷ்டப்படுவது?

2 comments:

  1. Honest opinion! (Some problem with sellinam. Not able to write in Tamil.) - இராயசெல்லப்பா

    ReplyDelete
  2. இக்காலகட்டத்தில் ஒரு இயல்பான, மாறுபட்ட படம்.

    ReplyDelete