தோழர் கருப்பு கருணா அவர்களின் முகநூல் பக்கத்தில் இப்பதிவை பார்த்ததும் வந்த சிரிப்பை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன்.
சூரியனுக்கு பல் இல்லாத காரணத்தால் அவருக்கு மெது ( உளுந்து) வடை படைக்கப்படுகிறதாம். இதை கண்டுபிடித்துச் சொன்னவர் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன்.
செவ்வாய் கிரகத்திற்கே இன்னும் மனிதன் செல்லாத காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனுக்குச் சென்று சூரியனுக்கு பல் கிடையாது என்பதை கண்டுபிடித்து பத்திரமாக பூமிக்கு மீண்டும் திரும்பிய அமைச்சருக்கு பாராட்டுக்கள்.
மசாலா (பருப்பு) வடை சாப்பிடக்கூடிய அளவிற்கு பல் உள்ளவர் யார் என்ற அடுத்த கண்டுபிடிப்பை அமைச்சர் இன்று வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
Ha ha :)
ReplyDeleteஒரு முட்டாள் ராஜாவுக்கு 99. முட்டாள் மந்திரிகள் இது கதை அந்த நாடு விளங்கிடும் ? ஹா ஹா
ReplyDeleteமகாராசா
எனக்கு இந்த படத்தில் உள்ள மெதுவடையை,அதன் அழகை வைத்து பார்க்கும் போது நீங்க செய்ததாகவே தெரிகிறது.
ReplyDeleteஇல்லையில்லை. இது அமைச்சரே போட்ட படம். அவர்தான் செய்தாரா என்று தெரியாது. நான் சமையலறை பக்கம் சமீபத்தில் புது முயற்சிகளுக்காக செல்லவில்லை
Deleteஅய்யோ, நிஜம்மா பல் இல்லிங்க நம்புங்க. பல் மட்டும் இல்ல, கையும் இல்ல, வாயும் இல்ல. இருந்திருந்தா கையால அந்த ஓட்ட வடய எடுத்து, வாயால திண்டிருக்கணும்ல. அப்புடி எதுவுமே நடக்கல. அப்புறம் முக்கியமா மூளையும் இல்ல, யாருக்கு? யாருக்கோ!!.
ReplyDelete:)
மோடியின் அமைச்சரவையில் இருப்பவர்களிடம் மூளையை எதிர்பார்க்கலாமா?
Delete