நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.
எல்லை காக்கும் ராணுவ வீரர்கள் சந்திக்கும் துயரம் தொடர்பாக ஆசான்
எழுதியுள்ளது கீழே உள்ளது. பிரச்சினைகளை சொன்னவரை இவர் எப்படி குறிப்பிடுகிறார்
என்று பாருங்கள். வெண்டைக்காயையும் விளக்கெண்ணையையும் கலந்து எழுதியது அது.
நம் நாட்டில் நீதிமன்றம், ராணுவம்
இரண்டுமே புனிதப் பசுக்களாக முன்வைக்கப்படுகின்றன. இரண்டுமே கேள்வி
கேட்பார் இல்லாமல் ஊழலில் புழுத்துக் கிடக்கின்றன என்பதே நான் அடிக்கடிக்
கேள்விப்படுவது. ராணுவத்தில் இருந்த பலர் ராணுவத்தில் உணவு உட்பட ரேஷன்
பொருட்கள் வெளிச் சந்தையில் விற்கப்படுவதைப் பற்றி பேசிக் கேட்டிருக்கிறேன்.
எல்லாமே அச்சத்துடன் சொல்லப்படும் முணுமுணுப்புகள். ஒருவர் சற்றே
கிறுக்குத்தனம் கொண்டவராதலால் உண்மையை உரக்க ஒலித்திருக்கிறார். இதுவே நான்
புரிந்துகொண்டது.
அதில் கடைசியாக இவ்வாறு எழுதி நிறைவு செய்கிறார்.
பாரதிய ஜனதாக்கட்சியின் தேசபக்தி உண்மை என்றால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதிகாரிகள். அந்த உண்மை சொல்லி அல்ல
எனது முந்தைய பதிவில் ராணுவ தளபதி தனது வீரர்களை மிரட்டியதை
குறிப்பிட்டிருந்தேன். ராணுவ துணை அமைச்சரும் அதே பாணியில்தான் மிரட்டியுள்ளார்.
ஆக ஆசான் சொன்னதன் அடிப்படையில் பார்க்கும் போது பாஜக வின் டேஷ்பக்தி பொய்
என்று நிரூபணமாகி விட்டது.
அதை உரக்க்ச்சொல்லும் அறம் ஆசானுக்கு உண்டா?
அவர் தளத்தில் இருக்கிறதா?
ReplyDelete