இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு முறை சென்றிருந்தேன். முதல் முறை 11.01.2017 புதன் கிழமை. சென்னைக்கு போன முக்கியமான வேலை மதியமே முடிந்து விட்டதால்
மூன்று மணிக்கெல்லம் அரங்கிற்குள் நுழைந்து விட்டேன்.
முகப்பிலேயே ஒரு சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம் கவுண்டர். ஏ.டி.எம் என்றால்
அதிலே பணம் இருக்காது என்பதுதான் அறுபத்தி ஐந்து நாள் அனுபவமாகி விட்டதால் யாரும்
அங்கே இல்லை. கொஞ்சம் சந்தேகத்தோடு அங்கிருந்த செக்யூரிட்டியைக் கேட்டால் “பண்ம் இருக்கு சார்" என்று சொல்ல நீண்ட நாட்களுக்குப் பிறகு வரிசையில் நிற்காமல் பணம் எடுத்துக் கொண்டு தெம்பாக உள்ளே சென்றேன்.
வேலை நாளில் மதிய வேளையில் சென்றதால் அவ்வளவாக கூட்டமே இல்லை. பல்வேறு ஸ்டால்களிலும் நிதானமாக புத்தகங்களை பார்த்து புரட்டி வாங்க முடிந்தது. ஒரு நாற்பது புத்தகங்களை வாங்க வேண்டும் என்று மனதில் ஒரு பட்டியல் இருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றையும் தேடி வாங்க முடிந்தது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கிடைக்காத ஒரு நூல் "சுவருக்குள் சித்திரங்கள்". தோழர் தியாகு தனது சிறை அனுபவங்களை ஜூனியர் விகடனில் தொடராக எழுதி பின்பு நூல் வடிவம் பெற்றது. தோழர் பாரதி கிருஷ்ணகுமார், வெண்மணி பற்றி இயக்கிய "ராமையாவின் குடிசை" ஆவணப்படம் பார்த்தது முதலே இந்த நூலை வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த வருடம்தான், அதுவும் நான் சென்ற முதல் ஸ்டாலிலேயே கிடைத்தது உற்சாகமாக இருந்தது. அந்த உற்சாகத்திலேயே முழுமூச்சாக அந்த ஐநூறு பக்க நூலை படித்து முடித்து விட்டேன்.
அதே போல் தொடராக வந்த இன்னொரு நூலை இப்போது படித்தால் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை. அது பற்றி பிறகு எழுதுகிறேன். இந்த முறை பிரபலங்கள் என்று யாரும் கண்ணில் படவில்லை. திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் பதிப்பகம் என்று ஒரு ஸ்டால் இருந்தது. அவரும் அங்கே உட்கார்ந்திருந்தார். அந்த ஸ்டாலை கடக்கையில் கையைப் பிடித்து இழுக்காத குறையாக ஒருவர் உள்ளே வரவைத்தார். ஆனால் புத்தகங்கள் அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. ஆர்.எஸ்.எஸ் வரலாறு என்று ஒரு நூல் இருந்தது. காங்கிரஸ்காரர் ஆயிற்றே, காமராஜரோடு நெருக்கமாக இருந்தவராயிற்றே, அவரை கொல்ல நடந்த சதி பற்றி ஏதாவது எழுதியிருப்பாரா என்று புரட்டிப்பார்த்தால் ஆர்.எஸ்.எஸ்ஸை புகழ்ந்து தள்ளியிருந்தார். அப்படியே வைத்து விட்டு நடையைக் கட்டி விட்டேன்.
ஏற்கனவே டெபிட் கார்ட் பயன்படுத்திய அனுபவம் மோசமாக இருந்ததால் ரொக்கமாக கொடுத்தே புத்தகங்கள் வாங்கினேன். முயற்சிக்கலாமே என்று யோசித்து கொடுத்த ஒரு பதிப்பகத்திலும் இணைப்பு கிடைக்காததால் அதன் பிறகு பையிலிருந்து எடுத்தது பணத்தை மட்டுமே.
கொண்டு போன இரண்டு பிக்ஷாப்பர் கட்டைப்பைகள் நிரம்பியதும்தான் வெளியே வந்தேன். அப்போதுதான் நேரத்தைப் பார்த்தேன். மூன்று மணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது.
வீட்டிற்கு வந்து பார்த்தால் திட்டமிட்ட சில நூல்களை வாங்காதது தெரிந்தது. ஞாயிறு அன்று சென்னை செல்ல வேண்டிய இன்னொரு வேலை வந்ததும் அதை பயன்படுத்திக் கொண்டு அவற்றையும் வாங்கி வந்து விட்டேன்.
பட்டியல் போட்டு பார்த்தால் மிகவும் மலைப்பாக இருக்கிறது. பயணங்கள் இருக்கும்வரை வாசிப்பதில் தடையில்லை. ஆனாலும் ரொம்பவே ஓவராக போய் விட்டது. அடுத்த வருடமாவது ஒரு சுயகட்டுப்பாடு கொண்டு வரவேண்டும். இதை வீட்டிலும் சொன்னேன்.
"ஒவ்வொரு வருஷமும் இதையே சொல்றீங்க. ஆனா வாங்கி குவிப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது" என்று பதில் வந்தது.
இப்போதைய உடனடி பிரச்சினையை தீர்க்க என்ன வழி என்றுதான் தெரியவில்லை. எந்த அலமாரியிலும் இடமில்லை. கம்ப்யூட்டர் மேஜையில் இருப்பதை எங்கே வைக்க?
பட்டியல் கீழே
பட்டியல் கீழே
எண் | பெயர் | ஆசிரியர் | தன்மை | பக்கம் | விலை |
1 | ஆர்டர், ஆர்டர் | கே.சந்துரு | நீதித்துறை பற்றி | 256 | 200 |
2 | தாழிடப்பட்ட கதவுகள் | அ.கரீம் | சிறுகதைகள் | 160 | 149 |
3 | நான் பூலான்தேவி | மரியே தெரஸ்கூன் | வாழ்க்கை வரலாறு | 363 | 300 |
தமிழில் மு.ந.புகழேந்தி | |||||
4 | வேடிக்கை பார்ப்பவன் | நா.முத்துக்குமார் | வாழ்க்கை அனுபவம் | 239 | 165 |
5 | நஞ்சுண்ட பூமி | பா.செயப்பிரகாசம் | கட்டுரைகள் | 240 | 200 |
6 | நீர் | வினாயக முருகன் | நாவல் புனைவு | 152 | 150 |
7 | ஐந்து முதலைகளின் கதை | சரவணன் சந்திரன் | நாவல் புனைவு | 168 | 150 |
8 | ரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | நாவல் புனைவு | 158 | 150 |
9 | நாளை மற்றொரு நாளல்ல | சுப்ரபாரதி மணியன் | கட்டுரைகள் | 88 | 60 |
10 | பயணங்கள் முடிவதில்லை | சோ.சுத்தான்ந்தம் | வாழ்க்கை அனுபவம் | 110 | 90 |
11 | மாவீரன் சிவாஜி | கோவிந்த் பன்சாரே | சிவாஜி பற்றி | 96 | 70 |
தமிழில் சி.நடேசன் | |||||
12 | ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் | அ.மார்க்ஸ் | அரசியல் | 158 | 160 |
13 | பிரியங்கா நளினி சந்திப்பு | பா.ஏகலைவன் | ராஜீவ் கொலை | 610 | 500 |
14 | வரலாறு என்னை விடுதலை | ஃபிடல் காஸ்ட்ரோ | நீதிமன்ற உரை | 128 | 70 |
செய்யும் | தமிழில் வீ.பா.கணேசன் | ||||
15 | தூக்கிலிடுபவரின் குறிப்புகள் | சசி வாரியர் | அனுபவம் | 272 | 220 |
16 | தெரு விளக்கும் மரத்தடியும் | ச.மாடசாமி | கல்வி | 88 | 80 |
17 | கருக்கு | பாமா | நாவல் புனைவு | 96 | 70 |
18 | இடையில்தான் எத்தனை | ச.சுப்பாராவ் | கட்டுரைகள் | 94 | 70 |
ஞாயிற்றுக்கிழமைகள்? | |||||
18 | கு.அழகிரிசாமிகள் சிறுகதைகள் | கு.அழகிரிசாமி | சிறுகதைகள் | 255 | 150 |
19 | மகளிர் தின்ம் - | இரா.ஜவஹர் | மகளிர் தினம் | 80 | 60 |
உண்மை வரலாறு | |||||
20 | சுமையா | கனவுப் பிரியன் | சிறுகதைகள் | 214 | 160 |
21 | ராஜீவ் காந்தியின் கடைசி | தா.பாண்டியன் | ராஜீவ் கொலை | 113 | 105 |
மணித்துளிகள் | |||||
22 | மருத்துவக் ஆய்வுக்கூடங்களில் | அ.உமர் ஹீலர் | மருத்துவத்துறை | 64 | 50 |
நடப்பது என்ன? | |||||
23 | முகிலினி | இரா.முருகவேள் | நாவல் சூழலியல் | 485 | 375 |
24 | காங்கிரிட் காடு | அப்டன் சிங்க்ளர் | நாவல் வரலாறு | 352 | 280 |
25 | செவ்வி | தொ.பரமசிவன் | நேர்காணல்கள் | 144 | 130 |
26 | விசாரணைகள் | அருணன் | தத்துவம், அரசியல் | 288 | 180 |
27 | ஊருக்கு செல்லும் வழி | கார்த்திக் புகழேந்தி | அனுபவம் | 128 | 75 |
28 | குறுக்குத்துறை ரகசியங்கள் | நெல்லை கண்ணன் | அனுபவம் | 112 | 99 |
29 | எது கருப்புப்பணம் | மருதையன் | செல்லா நோட்டு | 32 | 30 |
30 | லாக்கப் | மு.சந்திரகுமார் | அனுபவம் | 144 | 120 |
31 | நவம்பர் 8 | எஸ்.அர்ஷியா | செல்லா நோட்டு | 104 | 90 |
31 | தூக்குமேடையில் தோழர் பாலு | ஆர்.நல்லக்கண்ணு | அரசியல் | 20 | 15 |
32 | கூழாங்கற்கள் | கனவுப் பிரியன் | சிறுகதைகள் | 254 | 200 |
33 | உயிரே உயிரே | மாலன் | கட்டுரைகள் | 108 | 100 |
34 | பேசுவதை நிறுத்திக் கொண்ட | யமுனா ராஜேந்திரன் | கட்டுரைகள் | 147 | 130 |
சிறுவன் | |||||
35 | யானைச்சொப்பனம் | இரா.நாறும்புநாதன் | கட்டுரைகள் | 175 | 120 |
36 | வீரம் விளைந்த்து | நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கியன் | நாவல் புனைவு | 505 | 300 |
தமிழில் எஸ்.ராமகிருஷ்ணன் | |||||
37 | பாலை நில ரோஜா | கு.சின்னப்ப பாரதி | நாவல் புனைவு | 298 | 175 |
38 | கானகன் | லக்ஷ்மி சரவணகுமார் | நாவல் புனைவு | 264 | 99 |
39 | கடவுள் என்பது என்ன? | அஸ்வகோஷ் | தத்துவம் | 176 | 100 |
40 | பிம்பச்சிறை | எம்.எஸ்.எஸ்.பாண்டியன் | அரசியல் | 248 | 225 |
41 | மனிதனுக்குள் ஒரு மிருகம் | மதன் | கட்டுரைகள் | 339 | 190 |
42 | சமவெளி | வண்ணதாசன் | சிறுகதைகள் | 128 | 80 |
43 | உப பாணடவம் | எஸ்.ராமகிருஷ்ணன் | மகாபாரதம் | 384 | 300 |
44 | சீனப் பெண்கள் | சின்ரன் | சீனப் பெண்கள் பற்றி | 316 | 280 |
தமிழில் ஜி.விஜயபத்மா | |||||
45 | உழவுக்கும் உண்டு வரலாறு | கோ.நம்மாழ்வார் | விவசாயம் | 128 | 100 |
46 | கடவுள் தொடங்கிய இடம் | அ.முத்துலிங்கம் | நாவல் புனைவு | 269 | 155 |
47 | சுமார் எழுத்தாளரும் | அஜயன் பாலா | கட்டுரைகள் | 144 | 120 |
சூப்பர் ஸ்டாரும் | |||||
48 | அணிலாடும் முன்றில் | நா.முத்துக்குமார் | அனுபவம் | 144 | 115 |
49 | கள்ளம் | தஞ்சை பிரகாஷ் | நாவல் புனைவு | 222 | 200 |
50 | முயல் தோப்பு | பாஸ்கர் சக்தி | சிறுகதைகள் | 124 | 110 |
51 | ம் | ஷோபா சக்தி | நாவல் ஈழம் | 168 | 140 |
52 | என் உள்ளம் அழகான | கலாப்ரியா | கட்டுரைகள் | 136 | 120 |
வெள்ளித்திரை | |||||
53 | அத்திப்பழங்கள் இப்போதும் | ஆர்.விஜயசங்கர் | அரசியல் கட்டுரைகள் | 420 | 300 |
சிவப்பாகத்தான் இருக்கின்றன | |||||
54 | ஆரஞ்சு மணக்கும் பசி | ஸ்டாலின் சரவணன் | கவிதைகள் | 96 | 85 |
55 | புகைப்படக்காரன் பொய் | கருணாகரன் | நேர்காணல்கள் | 160 | 150 |
சொல்ல முடியாது | |||||
56 | ஆயில் ரேகை | பா.ராகவன் | பொருளாதாரம் | 199 | 145 |
57 | ஆலயமும் ஆகமமும் | சிகரம் ச.செந்தில்நாதன் | சமூகம் | 224 | 195 |
58 | மீசை என்பது வெறும் மயிர் | ஆதவன் தீட்சண்யா | நாவல் புனைவு | 176 | 130 |
59 | சைக்கிள் கமலத்தின் தங்கை | எஸ்.ராமகிருஷ்ணன் | சிறுகதைகள் | 136 | 140 |
60 | காஃபிர்களின் கதை | கீரணூர் ஜாகிர்ராஜா | சிறுகதைகள் | 208 | 160 |
61 | தேர்ந்தெடுத்த சிறுகதைகள் | ஜெயந்தன் | சிறுகதைகள் | 222 | 200 |
62 | கேரளத்தில் எங்கோ | லா.ச.ராமாமிர்தம் | நாவல் புனைவு | 112 | 70 |
63 | கொடக்கோனார் | அப்பண்ணசாமி | நாவல் புனைவு | 239 | 180 |
கொலை வழக்கு | |||||
64 | எங்கதை | இமையம் | நாவல் புனைவு | 110 | 125 |
65 | முஸ்தபாவை சுட்டுக்கொன்ற | அகரமுதல்வன் | சிறுகதைகள் | 111 | 100 |
ஓரிரவு | |||||
66 | ஒரு சிக்கல் இல்லாத காதல் | சுஜாதா | குறுநாவல் | 48 | 25 |
கதை | |||||
67 | விளிம்பு | சுஜாதா | குறுநாவல் | 55 | 25 |
68 | கை | சுஜாதா | குறுநாவல் | 79 | 40 |
69 | ஒரு சிறு இசை | வண்ணதாசன் | சிறுகதைகள் | 160 | 140 |
70 | சுவருக்குள் சித்திரங்க்ள் | தியாகு | சிறை அனுபவம் | 525 | 330 |
71 | செல்லுலாய்டின் மாபூமி | களப்பிரன் | கட்டுரைகள் சினிமா | 175 | 150 |
72 | பிறிதொரு பொழுதில் | எஸ்.ஜி.ரமேஷ்பாபு | போராட்ட அனுபவம் | 128 | 100 |
73 | கருத்த லெப்பை | கீரணூர் ஜாகிர்ராஜா | நாவல் புனைவு | 72 | 70 |
74 | கிருஷ்ணப் பருந்து | அ.மாதவன் | நாவல் புனைவு | 128 | 120 |
75 | எது கல்வி? | இரா.எட்வின் | கட்டுரைகள் கல்வி | 176 | 150 |
76 | சாபிளினுடன் பேசுங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன் | கட்டுரைகள் சினிமா | 159 | 140 |
77 | விலங்குப் பண்ணை | ஜார்ஜ் ஆர்வெல் | நாவல் புனைவு | 127 | 125 |
78 | அய்யங்காளி | டி.எச்.பி.செந்தாரசேரி | வாழ்க்கை வரலாறு | 56 | 40 |
தமிழில் மு.ந.புகழேந்தி | |||||
79 | உத்தம வில்லன் | யமுனா ராஜேந்திரன் | கட்டுரைகள் சினிமா | 119 | 135 |
80 | பார்த்தினியம் | தமிழ்நதி | நாவல் ஈழம் | 512 | 450 |
81 | வேல ராமமூர்த்தி கதைகள் | வேல ராமமூர்த்தி | சிறுகதைகள் | 378 | 250 |
15998 | 12402 | ||||
தாங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலைப் படிக்கப் படிக்க மனம் மகிழ்கிறது நண்பரே
ReplyDeleteBook purchase is not an expenditure rather an investment
ReplyDeleteHats off to you
Great list.Happy reading! !!!
ReplyDelete