ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழகமெங்கும் மாணவர்கள் நடத்தி வரும் உறுதியான போராட்டம் வெல்லட்டும்.
அரசியல்வாதிகள் வேண்டாம் என்று சொல்பவர்கள் இன்றைய நிகழ்வின் மூலமாக ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னே உள்ளே அரசியலை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அவசரச்சட்டம் மூலமாகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி,
ஆதார் அட்டையை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று பல முறை உச்ச நீதிமன்றம் சொன்னாலும் தொடர்ந்து அதை உதாசீனம் செய்து வரும் நரேந்திர மோடி,
காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்திய நரேந்திர மோடி
இப்போது மட்டும் நீதிமன்றத்தை காரணம் காண்பித்து கை விரிப்பது அப்பட்டமான மோசடி என்பதை
உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.
ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வோடும் உரிமையோடும் தொடர்புடைய பிரச்சினை.
இப்போராட்டம் வெல்லட்டும். உறுதி வெல்லும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.
ஜல்லிக்கட்டோடு உங்கள் போராட்ட உணர்வு நின்று போய் விட வேண்டாம்.
இப்போராட்டம் உணர்வோடும் உரிமையோடும் தொடர்புடையது என்றால் நம் வாழ்வோடும் உயிரோடும் வளர்ச்சியோடும் தொடர்புடைய ஏராளமான பிரச்சினைகள் உள்ளது. அதைப்பற்றி பேச இது பொருத்தமான நேரமில்லை.
உங்கள் மனதில் மூண்ட தீயை அணையாமல் பாதுகாத்து வையுங்கள்.
அரசியல் இல்லாமல் எதுவுமில்லை. மக்களுக்கான அரசியல் எது என்பதையும் அந்த அரசியல் களத்தில் மக்களுக்காக உண்மையிலேயே நிற்பவர்கள் யார் என்பதையும் இப்போராட்டத்தின் இறுதியில் அறிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு
போராட்டம் வெல்லட்டும் என மீண்டும் வாழ்த்துகிறேன்.
உலகத்தில் சிறந்த நீதிமான்கள் தமிழக போலீஸே தனது சீருடையில் தில்லாக நின்று மாட்டோடு சண்டைபோடும் போரட்டத்திற்கு ஆதரவு கொடுக்கின்றது என்றால்,
ReplyDeleteசினிமா விஐபிக்களின் ஆதரவும் இருப்பதினால், அமெரிக்காவில் வசிக்கும் தமிழக தமிழர்கள் சிலரும் மாட்டோடு சண்டை போடுவதற்கு ஆதரவு தெரிவிப்பதால், மாட்டோடு சண்டை போட வேண்டும் என்கின்ற போராட்டம் எவ்வளவு தமிழகத்தின் அத்தியாவசி தேவையாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.