Wednesday, January 18, 2017

தற்கொலை செய்ய வைத்தால் விருது




நேற்று ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் முதலாண்டு நினைவு நாள்.

ரோஹித் வெமுலாவை மறந்து போனவர்கள் யாராவது இருந்தால் கீழே உள்ள இரண்டு இணைப்புக்களை படித்து விடுங்கள்



ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. அவர் தலித் கிடையாது என்று எப்படியாவது நிரூபிக்க முடியுமா என்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அவரது மரணத்திற்கான அழுத்ததை ஏற்படுத்திய அமைச்சர்கள் ஸ்மிர்தி இராணியும் பண்டாரு தத்தாத்ரேயாவும் இன்னும் மோடியின் அமைச்சரவையை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முதல் குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்ட துணைவேந்தர் அப்பாராவ் இன்னும் அதே பதவியில் தொடர்வது மட்டும் கொடுமை அல்ல, மோடி சமீபத்தில் அவருக்கு ஒரு விருது வேறு கொடுத்து கௌரவித்துள்ளார்.



ஆனால் இதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

எல்லோருமே ஒரே கூட்டம்தானே!

கொலைகாரக் கூட்டம்

No comments:

Post a Comment