இந்திய மூவர்ணக் கொடி போல மிதியடி விற்ற அமேசானின் அக்கிரமத்தை மறந்திருக்க மாட்டீர்கள். சுஷ்மா ஸ்வராஜ் சொன்னது போல மன்னிப்பு கேட்டார்களா என்று தெரியவில்லை.
நான் எழுதப் போவது வேறு ஒரு விஷயம்.
கீழே உள்ள படம் வாட்ஸப்பில் வந்தது.
அதன் படி பார்த்தால் ஒரே ஒரு மாவிலையின் விலை என்ன தெரியுமா?
இதயக் கோளாறுகள் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.
ஒரு மாவிலையை அமேசானில் நீங்கள் ரூபாய் 220 கொடுத்துதான் வாங்க வேண்டாம்.
தகவல் சரியா என்று அமேசான் தளத்தில் தேடினால் இந்திய சந்தை நிலவரம் தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவில் விற்கப்படும் மாவிலை பற்றிய விபரம் கிடைத்தது.
நாற்பது மாவிலைகள் 24.95 டாலர்கள். இந்திய மதிப்பில் கணக்கிட்டுப் பார்த்தால் (இன்று ஒரு டாலருக்கு 68.18 ரூபாய்) ஒரு மாவிலையின் ரூபாய் 42.52.
இதையெல்லாமும் சேர்த்துதான் பொங்கலுக்கு மூன்று லட்சம் பொருட்கள் என்று விற்கிறார்கள் போல.
இதையும் வாங்க சில கனவான்கள் இருப்பார்கள் என்பதும் இந்திய யதார்த்தம்தானே.
வறட்டியைக் கூட ஆன்லைனில் விற்றதை நாம் மறந்து விட முடியுமா என்ன?
என்ன கொடுமை...!
ReplyDeleteநண்பர்களிடம் பகிர்ந்து விட்டேன் நன்றி...
Kodumai
ReplyDeleteKodumai
ReplyDeleteஅமேசான் என்பது இனையச்சந்தை, அதில் யார் வேன்டுமானாலும் கடை போட்டுக்கொள்ளலாம் தடை செய்யப்பட்ட, மற்றும் சட்ட விரோத பொருட்களை விற்க முடியாது.
ReplyDeleteமாவிலை 40 ரூபாய்க்கு யாரோ விற்கின்றார்கள் என்றால் அமேசான் என்ன செய்ய முடியும்?
அப்புறம் இந்திய தேசியக்கொடி மிதியடியை விற்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு அமேசான் பொறுப்பு ஏற்க முடியாது.
அமெரிக்கர்கள் எல்லாம் நெஞ்சிலே நாட்டுப்பற்றை உண்மையாக சுமப்பவர்கள். தேசியக்கொடியை ஜட்டி, பாடி, மவுஸ் பேடு, மிதியடி, விளக்குமாறு கைப்பிடி, மற்றும் என்னவெல்லாம் செய்ய முடியுமே அனைத்தையும் செய்வார்கள். உணர்வுள்ள நாட்டுப்பற்று மிக்க அவர்கள் இதை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.
இந்தியாவில்தான் போலி தேசியத்தை சுமந்து நாட்டுப்பற்றை உதட்டளவில் வைத்து இருப்பார்கள். நாடு மக்கள்மீது பற்றாக இருந்தால்தானே நாடு மீது பற்று வரும். மக்கள் எக்கேடு கெட்டுப்போனால் என்ன , எப்படி அழிந்துபோனால் என்னன்னு நினைக்கும்போது என்ன வரும்.
இதையெல்லாம் மறைத்து நானும் நாட்டுப்பற்றூக்காரன் அதனால் மிதியடியில் தேசியக்கொடி போடகூடாதுன்னு சொல்லுறது என்னன்னு சொல்லுறது?
நீங்க எல்லாம் ரொம்ப நல்லா வருவீங்க. நல்லா இருங்க
Deleteயோகா செய்யும் போது , இந்திய கொடியை வைத்து முகம் துடைத்தார் பிரதமர்...இதை ஏன் சுஷ்மா அம்மா கண்டிக்கவில்லை.../
Deleteநல்ல கேள்வி
Delete