மிஸ்டு காலும் பாஜக புளுகும்
நாடு
முழுவதும் 10 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து சீன கம்யூனிஸ்ட்
கட்சியின் உலக சாதனையை முறியடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட்
கட்சி 6.48 கோடி உறுப்பினர்களை சேர்த்து உலக சாதனை படைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.”தமிழ் (இந்துவில்) வந்துள்ள செய்தி . மற்ற செய்திகளில்
தங்கள் கருத்தை நுழைத்து செய்திவழி கருத்துத் திணிப்பு செய்யும் ஊடகங்கள்
இந்தச் செய்தியை அப்படியே வெளியிட்டு கருத்துப் பிரச்சாரம் செய்துள்ளது
.பாஜகவில் உறுப்பினராவதும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவதும் ஒன்றா?
மிஸ்டு கால் கொடுத்தால் நீங்கள் உறுப்பினராகிவிடலாம் என்கிறது பாஜக. ஒரு நிமிடத்தில் மூன்று உறுப்பினர் சேருவதாகத் தப்பட்டம் அடிக்கிறார் தமிழிசை. இந்தியா முழுவதும் பாஜகவில் உறுப்பினர் குவிவதாக பீற்றுகிறார் அமித் ஷா. இந்த மிஸ்ட் கால் உறுப்பினர் எண்ணிக்கையை கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கையோடு ஒப்பிட இயலுமா? இதுவே அடிப்படைக் கேள்வி.உலகில் எந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியாக இருப்பினும் அதில் உறுப்பினராவது சுலபமல்ல. மிஸ்டு கால் மூலம் எந்த அறிமுகமும் இல்லாதவர்களும் உறுப்பினராக முடியாது.முதலில் கட்சி திட்டத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்திட வேண்டும்; மாதாமாதம் கட்சிக்கு தன் வருமானத்துக்கு ஏற்ப ஒரு சிறு தொகை லெவியாக செலுத்த வேண்டும். கட்சிப்பணிகளில் பங்கேற்க வேண்டும்.அதிலும் முதலில் நேரடியாக உறுப்பினராக முடியாது; துணைக் குழுவிலிருந்து கட்சிக் கொள்கைகளை நடைமுறைகளைப் பயிலவேண்டும். பின்னர் பரிட்சார்த்த உறுப்பினராக ஓராண்டு இருக்க வேண்டும்.
அதன் பின்னரே உறுப்பினராக இயலும்.இப்படி சேருவோரையும் கட்சியில் ஏற்கெனவே உள்ள ஒருவர் முன்மொழிய இன்னொருவர் வழி மொழிய வேண்டும். அதனைக் கட்சிக்கிளை பரிசீலித்தே உறுப்பினர் தகுதி வழங்கும். மேல் குழு இதனை அங்கீகரித்த பின்னரே உறுப்பினர் அட்டை வழங்கப்படும்.இப்படி கம்யூனிஸ்ட் கட்சி சேர்க்கும் உறுப்பினர்களும் சும்மா மிஸ்டு கால் மூலம் சேரும் உறுப்பினர்களும் ஒன்று என்று சொல்லுவது எப்படிச் சரியாகும்.பொய்யில் புழுத்த தொலைக்காட்சிவர்த்தக விளம்பரத்தைவிட அதிகம் பொய் சொல்வது பாஜகவே! பொய்யையே நம்புகிறார்கள்! பொய்யையே பிரச்சாரம் செய்கிறார்கள்! அதில் மிஸ்டு காலும் ஒன்று!
நன்றி - தீக்கதிர் 10.01.2015

No comments:
Post a Comment