
இந்தியா தனக்கான அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு குடியரசு நாடாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டதைத்தான் நாம் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.
அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொடுத்த அண்ணல் அம்பேத்கரின் வாழ்வைச் சொன்ன, மம்முட்டியில் அற்புத நடிப்பில் வெளி வந்த "அம்பேத்கர்" திரைப்படத்தை எந்த தொலைக்காட்சி சேனலாவது குடியரசு தின சிற்ப்புப் படமாக ஒளிபரப்புவார்களா?
அப்படி செய்தால் அவர்களை நான் பாராட்டுவேன்.
ஆனால் பல வருடங்களாக பெட்டிக்குள் சுருண்டிருந்த "அம்பேத்கர்" திரைப்படம் இரண்டாண்டுகள் முன்பாகத்தான் அதுவும் கடுமையான முயற்சிகளினால், பல இடங்களில் தமுஎகச தோழர்களின் முனைப்பால்தான் திரையிடப்பட்டது.
அப்படி இருக்கையில் அரசியல் சாசனத்தை மதிக்காதவர்களின் ஆட்சியில் அரசியல் சாசனச் சிற்பியை கோடீஸ்வர சேனல்கள் நினைவில் கொள்வார்களா என்ன?
No comments:
Post a Comment